1. Blogs

சாவு வீட்டில் ஸ்மைல் குரூப் ஃபோட்டோ!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Smile photo in the house of death!

ஒரு குடும்பத்தினர், இறந்துபோன 95 வயது மூதாட்டி உடலோடு சிரித்த முகத்துடன் உறவினர்கள் எடுத்த புகைப்படம் எடுத்த சம்பவம் மற்றவர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

நம் அன்பிற்கு உரிய உறவினர்கள், மரணம் அடைந்துவிட்டால், கட்டுப்படுத்த முடியாத அழகைதான் நமக்கு முதலில் ஆறுதல் அளிக்க வரும். ஆனால் இறந்தவரின் உடலுடன் சிரித்தபடி குரூப் போட்டோ எடுத்திருக்கிறார்கள், இந்த குடும்பத்தினர். இறந்த மூதாட்டிக்கு 9 குழந்தைகள், 19 பேரக்குழந்தைகள்.

19 பேரக்குழந்தைகள்

கேரளா பத்தனம்திட்டா மல்லப்பள்ளியைச் சேர்ந்தது பனவெலில் குடும்பம்.
கொலை செய்யப்பட்டதாக சகோதரர் புகார் அந்த குடும்பத்தின் 95 வயது மூதாட்டி மரியம்மா வர்கீஸ் கடந்த வாரம் இறந்துபோனார். இவரது கணவரான கிறிஸ்தவ மதபோதகர் வர்கீஸ் ஏற்கனவே மரணம் அடைந்துவிட்டார். இவர்களுக்கு 9 குழந்தைகள், 19 பேரக்குழந்தைகள். அனைவரும் உலகின் பல்வேறு நாடுகளில் வசிக்கிறார்கள்.

4 தலைமுறைகள்

ஆனால் 4 தலைமுறைகளைச் சேர்ந்த அவர்களில் பலர், மூதாட்டியின் இறுதிமூச்சின்போது அருகில் இருக்க வந்துவிட்டார்கள். மூதாட்டி இறந்ததும் மத வழக்கப்படி முறையாக இறுதிச்சடங்கு செய்தவர்கள், அதற்கு முன் அவரது உடல் வைக்கப்பட்ட கண்ணாடி பெட்டியுடன் சிரித்த முகத்தோடு குழு புகைப்படமும் எடுத்துக்கொண்டார்கள். அந்த படம் சமூக வலைதளத்தில் பரவியதும்தான் சர்ச்சை பற்றிக்கொண்டது.

நிறைவான வாழ்வு

துக்க வீடு என்றாலே இறுக்கமான முகத்துடன்தான் இருக்க வேண்டுமா? இப்படி கலகலப்பாகவும் இருக்கலாமே?' என்று இவர்கள் காட்டியிருக்கிறார்கள்.
மூதாட்டியின் மூத்த மகனான அருட்தந்தை ஜார்ஜ் உம்மனோ கூறியதாவது:-
மற்றவர்களின் கருத்து பற்றி எங்களுக்கு கவலையில்லை. நிறைவான வாழ்வை வாழ்ந்து முடித்த எங்கள் தாயின் மரணத்தின்போது குடும்பத்தினர் அனைவரும் இயல்பான உணர்வை வெளிப்படுத்தினோம்.

பின்னர், அவருடனான சிரிப்பும், நெகிழ்வுமான தருணங்களை ஒவ்வொருவரும் பகிர்ந்துகொண்டோம். அப்போது எடுத்த ஒரு படம்தான் இது. 10 ஆண்டுகளுக்கு முன் எங்கள் தந்தை இறந்தபோதும் இப்படித்தான் மகிழ்வாக இறுதி விடை கொடுத்தோம்' என்கிறார்.

வித்தியாசமானது

நம்ம ஊரில் 'கல்யாண சாவு' என்பார்களே. இதையும் அப்படியே வைத்துக்கொள்ளலாம். பொதுவாக அரசியல் தலைவர்கள் ஓரிடத்தில் சந்தித்துக்கொண்டாலோ, வகுப்பில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கோ குரூப் போட்டோ எடுப்பதை மட்டுமே பார்த்துப் பழகிய நமக்கு, இந்த போட்டோ சற்று வித்தியாசமானதுதான்.

மேலும் படிக்க...

தமிழக இளைஞர்களுக்கு வேலை- சென்னையில் சிறப்பு முகாம்!

வெறும் 750 ரூபாய்க்கு சமையல் எரிவாயு சிலிண்டர் கிடைக்கும்!

English Summary: Smile photo in the house of death! Published on: 26 August 2022, 11:08 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.