மத்திய கிழக்கில் உள்ள இந்திய மாணவர் சமூகத்திற்கு வசதியாக குவைத்தில் நீட் தேர்வு நிறுவனத்திற்கான புதிய தேர்வு மையம் திறக்கப்பட்டுள்ளது என்றும் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார். முதல், மருத்துவ நுழைவுத் தேர்வில் நீட்-யுஜி 13 மொழிகளில் நடத்தப்படும் என்றும் கூடுதலாக மலையாளம் மற்றும் பஞ்சாபியுடன் ஆகிய புதிய மொழிகளிலும் நடத்தப்படும் என்று புதிதாக நியமிக்கப்பட்ட கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.
மத்திய கிழக்கில் உள்ள இந்திய மாணவர் சமூகத்திற்கு வசதியாக குவைத்தில் தேசிய தகுதி-நுழைவுத் தேர்வுக்கான (நீட்) புதிய தேர்வு மையம் திறக்கப்பட்டுள்ளது என்றும் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார். "நீட் (யுஜி) 2021 க்கான பதிவுகள் இன்று மாலை 5:00 மணி முதல் http://ntaneet.nic.in என்ற இணையதளத்தில் பதிவிடப்பட்டுள்ளன. நீட் (யுஜி) தேர்வு வரலாற்றில் முதல் முறையாக மற்றும் இந்திய மாணவர் சமூகத்திற்கு வசதியாக மத்திய கிழக்கு மற்றும் குவைத்தில் ஒரு தேர்வு மையம் திறக்கப்பட்டுள்ளது, ”என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.
"நீட் (யுஜி) 2021 தேர்வு முதல் முறையாக 13 மொழிகளில் அதாவது பஞ்சாபி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளையும் சேர்த்து நடத்தப்படும்" என்று பிரதான் கூறினார். இந்தி, பஞ்சாபி, அசாமி, பெங்காலி, ஒடியா, குஜராத்தி, மராத்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், தமிழ், உருது மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இப்போது நடத்தப்படவுள்ளன.முன்னதாக ஆகஸ்ட் 1 ஆம் தேதி திட்டமிடப்பட்டிருந்த நீட் தேர்வு இப்போது செப்டம்பர் 12 ஆம் தேதி நடத்தப்படும் என்று கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் திங்களன்று அறிவித்திருந்தார். NEET-UG க்கான விண்ணப்ப செயல்முறை இன்று மாலை 5 மணிக்கு தொடங்கியது.
தேர்வு நடத்தப்படும் நகரங்களின் எண்ணிக்கை 155 முதல் 198 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சமூக இடைவெளிக்கான விதிமுறைகளும் பின்பற்றுவதற்கான செயல்முறைகளை சரி பார்க்கப்படுகின்றன. 2020 ஆம் ஆண்டில் பயன்படுத்தப்பட்ட, 3,862 தேர்வு மையங்களோடு சேர்த்து கூடுதல் தேர்வு மையங்களும் அதிகரிக்கப்படும்.
"கோவிட் -19 நெறிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்வதற்காக, மையத்தில் உள்ள அனைத்து கண்காணிப்பாளர்களும்,மாணவர்கள், தேர்வு மேற்பார்வையாளர்களுக்கும் முககவசம் வழங்கப்படும். தேர்வு அறைக்கு நுழையும் மற்றும் வெளியேறும் குறிப்பிட்ட நேர மேம்பாடு, தொடர்பில்லாத வருகை பதிவு, கை சுத்திகரிப்பு, சமூக இடைவெளி பின்பற்றி இருக்கையில் அமர்வது போன்றவை உறுதி செய்யப்படும்" என்று அமைச்சர் கூறினார். கடந்த ஆண்டு, கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு கடுமையான முன்னெச்சரிக்கைகளுக்கு மத்தியில் செப்டம்பர் 13 ஆம் தேதி அன்று நடத்தப்பட்டது. தேர்வில் 13.66 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர், அவர்களில் 7,71,500 பேர் தகுதி பெற்றனர்.
மேலும் படிக்க:
NEET தாக்கம் குறித்து 86342 பேர் தெரிவித்த கருத்து.
செப்டம்பர் 12ம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்!