1. செய்திகள்

NEET தாக்கம் குறித்து 86342 பேர் தெரிவித்த கருத்து.

T. Vigneshwaran
T. Vigneshwaran

மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வு மூலம், தமிழக மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து தமிழக அரசால் ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையிலான குழு துவங்கப்பட்டது.

பொது மக்கள், நீட் தேர்வு குறித்த தங்கள் கருத்துக்களை இந்த ஆய்வுக்குழுவிடம் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

இதனால், ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் நீட் தேர்வு குறித்து அமைக்கப்பட்ட  ஆய்வுக்குழுவின் மூன்றாவது கூட்டம் சென்னையில் இன்று நடந்தது. அதைத் தொடர்ந்து ஆய்வுக்குழு தலைவர் ஏ.கே.ராஜன் மற்றும் பிற உறுப்பினர்கள் இன்று செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர். நீட் தேர்வின் தாக்கம் குறித்து மொத்தம் 86,342 பேர் கருத்து தெரிவித்துள்ளனர் என்று ஏ.கே.ராஜன் கூறினார்.

மேலும் படிக்க: 

பிரதமரை சந்தித்து 30 கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்!

பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துக்களைப் பற்றி கூறிய ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன், "நீட் தேர்வின் தாக்கம் குறித்து 86,342 பேர் தங்களது கருத்துக்களை  தெரிவித்துள்ளார்கள். நீட் தேர்வு வேண்டாம் என்றும் நீட் தேர்வுக்கு ஆதரவாகவும் கருத்துகள் வந்துள்ளது. சிலர் தேர்வு வேண்டாம் என்றும் சிலர் தேர்வு நடக்க வேண்டும் என்றும் கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளனர்.அனைத்து கருத்தகளும் நன்கு ஆராயப்பட்ட பிறகு அறிக்கை தாக்கல் செய்யப்படும். அனைத்துக் கருத்துகளையும் நன்றாக ஆராய்ந்து ஒருமாதத்திற்குள் அறிக்கையை அரசாங்கத்திடம் தாக்கல் செய்ய ஆலோசனை செய்து வருக்கிறோம். எங்களது ஆய்வு முடியாவிட்டால் அறிக்கை தாக்கல் தள்ளிப் போகவும் வாய்ப்புள்ளது, நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்யும் குழுவின் அடுத்த ஆலோசனைக் கூட்டம் வரும் திங்களன்று நடைபெறவுள்ளது என்று கூறினார்.

மேலும் படிக்க: 

சிபிஎஸ்இ வகுப்பு 12 வாரிய தேர்வு 2021 முடிவுகள்,தேர்வு மதிப்பெண்கள் கணக்கீடு

 

முன்னதாக, தமிழக சட்டமன்ற தேர்தல்களில், திமுக ஆட்சிக்கு வந்தால்,  தமிழகத்தில் இருந்து நீட் தெர்வு அகற்றப்படும் என கட்சி கூறியது. ஆட்சிக்கு வந்த பின்னர், அது தொடர்பான நடவடிக்கையில் அரசு ஈடுபட்டு வருகிறது.

நீட் தேர்வால் மாணவர்களுக்கு ஏற்படும் தாக்கத்தைப் பற்றி ஆராய்ந்து பார்க்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஆய்வுக்குழுவை அரசு ஏற்படுத்தியது. இந்த குழுவில் மருத்துவர்கள் ஜி.ஆர்.ரவீந்திரநாத், ஜவஹர் நேசன் உள்ளிட்ட 8 பேர் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள்.

மேலும் படிக்க: 

கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி பி ஏவுகணையின் சோதனை வெற்றி

 

English Summary: Latest Neet News in tamil :Comment by 86342 people about the impact of NEET. Latest Neet News in tamil

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.