நியூட்ரினோ ஆய்வகம் அமைவதன் மூலம், இயற்பியல் ஆய்வு உலக வரைபடத்தில், தமிழகத்தின் தேனி மாவட்டம் முக்கிய இடம் பிடிக்கும் என விஞ்ஞானிகள் யோசனைத் தெரிவித்துள்ளனர்.
விஞ்ஞானிகள் கோரிக்கை(Scientists demand)
அறிவியல் ஆய்வுகளில், தமிழக மாணவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தும். என்பதால், இந்த திட்டத்துக்கு அனுமதி அளிக்க வேண்டும்' என, முதல்வர் ஸ்டாலினுக்கு விஞ்ஞானிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
தமிழகத்தின் தேனி மாவட்டம் பொட்டிபுரத்தில், நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கப்படும் என, மத்திய அரசு அறிவித்தது.
கோரிக்கை மனு (Request Petition)
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை, டெல்லியில் அண்மையில் சந்தித்த முதல்வர் ஸ்டாலின், இந்தத் திட்டத்தை கைவிடும்படி கோரிக்கை மனு அளித்தார். இதன் காரணமாக, இந்த விவகாரம் மீண்டும் முக்கியத்துவம் பெற்றது.
முதல்வருக்குக் கோரிக்கை (Request to CM)
இந்த நிலையில், சென்னை, ஐ.ஐ.டி., பேராசிரியர் சி. பாஸ்கரன், சென்னை கணித மைய முன்னாள் பேராசிரியர், டி.ஆர். கோவிந்தராஜன் உள்ளிட்டோர், திட்டத்துக்கு அனுமதி அளிக்கும்படி, முதல்வர் ஸ்டாலினுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அவர்கள் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது:
நியூட்ரினோ ஆய்வும் நிறுத்தம் (Stop neutrino exploration)
நியூட்ரினோ குறித்து, கர்நாடகாவின் கோலார் தங்கவயலில், ஏற்கனவே ஆய்வு செய்யப்பட்டது. தங்கவயல் திட்டம் கைவிடப்பட்டதால், நியூட்ரினோ ஆய்வும் நிறுத்தப்பட்டது.
நீண்ட கால ஆய்வு (Long-term study)
நியூட்ரினோ குறித்து மத்திய அரசு நீண்ட காலமாக ஆய்வு செய்து வருகிறது. தற்போது, பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
ஆராய்ச்சி (Research)
இதற்கு எந்த நீதிமன்ற தடையும் இல்லை. இந்த ஆய்வு மையம் வர்த்தக ரீதியிலானது அல்ல, ஆராய்ச்சி மற்றும் கல்வி அடிப்படையிலானது. நாம் இயற்கையை மிகவும் ஆழமாக புரிந்து கொள்வதற்கு, இந்த மையம் பெரும் உதவியாக இருக்கும்.
எதிர்ப்பு - புகார்கள் (Protest - Complaints)
ஆனால், சரியான தகவல்கள், புரிந்துணர்வு இல்லாமல், சில தனிநபர்கள், அமைப்புகள், இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நியூட்ரினோ திட்டத்தால், கதிர்வீச்சு அபாயம் உள்ளது. ஆழ்துளை அமைக்கப்படுவதால், 40 கி.மீ., தொலைவில் உள்ள அணைக்கு பாதிப்பு ஏற்படும். அணுக் கழிவுகள் இந்தப் பகுதியில் கொட்டப்படும். இந்த ஆய்வால், சுற்றுச்சூழல் மற்றும் நிலத்தடி நீர் மாசுபடும் என, சில புகார்களையும் அவர்கள் கூறியுள்ளனர்.
அறிவியல்பூர்வமாக விளக்கம் (Scientifically explained)
இந்த சந்தேகங்கள், பயம் எல்லாம் தேவையில்லை என, பலமுறை அறிவியல்பூர்வமாக விளக்கப்பட்டுள்ளது.
ஆய்வு அறிக்கை (Study Report)
இந்த திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் தாக்கம் குறித்த அறிக்கை, இந்திய நியூட்ரினோ ஆய்வு அமைப்பின் இணையதளத்தில், பல மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.
நியூட்ரினோ ஆய்வு திட்டத்தின் கீழ், பல பல்கலைகள், ஆராய்ச்சி மையங்கள் மற்றும் இயற்பியல் ஆய்வாளர்கள் அடங்கிய மிகப் பெரிய ஆய்வு குழு அமைக்கப்பட உள்ளது.
டெலஸ்கோப் (Telescope)
இதன் வாயிலாக, நம் நாட்டில் இயற்பியல் ஆய்வுகள் வேகமெடுக்கும். உலக வரைபடத்தில், அறிவியல் ஆய்வில் இந்தியாவுக்கு முக்கிய இடம் கிடைக்கும். இந்தத் திட்டத்தால் எந்த சுற்றுச்சூழல் பாதிப்போ, வன விலங்குகள் பாதிப்போ, அணைகள், நிலத்தடி நீராதார பாதிப்போ ஏற்படாது. தொழில்நுட்ப ரீதியில் கூற வேண்டுமானால், இங்கு பிரமாண்ட, 'டெலஸ்கோப்' எனப்படும், தொலைநோக்கி அமைக்கப்பட உள்ளது.
பாதிப்பு இல்லை (No vulnerability)
கொடைக்கானல், ஊட்டியில் உள்ளது போன்று, அறிவியல் ஆய்வுக்கான தொலைநோக்கியே, இங்கும் அமைய உள்ளது. ஏற்கனவே, கோலார் தங்க வயலில், இதுபோன்ற ஆய்வு மையம் செயல்பட்டுள்ளது. அங்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
நியூட்ரினோ (Neutrino)
அறிவியல்பூர்வமாக நியூட்ரினோ என்பது, எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத அணுத் துகளாகும். அதை சிறப்பு தொலைநோக்கி வாயிலாகவே ஆய்வு செய்ய முடியும். அதற்காகவே, பொட்டிபுரம் மலைப்பகுதி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
அங்குள்ள பாறைகள், இதுபோன்ற ஆய்வுக்கு உகந்தவையாக உள்ளதே இதற்கு காரணம்.பாராட்டுதமிழகத்தை சேர்ந்த மாணவர்களுக்கு, ஆய்வுகளில் ஆர்வத்தை ஏற்படுத்தவும், வாய்ப்பை அளிக்கவும், இந்த திட்டம் மிகப்பெரும் வரப்பிரசாதம்.
கலாம் வரவேற்றார் (Kalam welcomed)
இந்த திட்டத்தை, முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் வெகுவாக பாராட்டியுள்ளார். இந்நிலையில், நோபல் பரிசு வென்றுள்ள விஞ்ஞானிகள், கனடாவை சேர்ந்த ஆர்த்தர் மெக்டொனால்டு, ஜப்பானைச் சேர்ந்த கஜிதா உட்பட பல விஞ்ஞானிகளுடன் இணைந்து, முதல்வருக்கு ஒரு கோரிக்கை வைக்கிறோம்.
அனுமதி அளிக்கலாம் (Permission may be granted)
அறிவியல் வளர்ச்சிக்குஉதவும் நியூட்ரினோ ஆய்வு மைய திட்டத்துக்கு அனுமதி அளிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
வயல்களில் பதுங்கியுள்ள எலிகள்- தந்திரமாகக் கையாள்வது எப்படி!
சந்தைப் போட்டி இல்லாத சாத்துக்குடி சாகுபடி! விவசாயிகள் ஆர்வம்!