வேளாண் துறையில் சீர்திருத்தங்கள் செய்தமைக்கு பிரதமர் மோடிக்கு பாராட்டுத் தெரிவித்து, பாஜகவின் புதிய தேசிய நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பாஜகவில் புதிதாக நியமிக்கப்பட்ட தேசிய அளவிலான நிர்வாகிகள் கூட்டம் முதல் முறையாக டெல்லியில் நடைபெற்றது . இந்த கூட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார், பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா தலைமை தாங்கினார்.
இந்த கூட்டத்தில் 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல், ஆத்மநிர்பார் திட்டம், வேளாண் சட்டங்கள், விவசாயிகள் போராட்டம் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக பாஜக தேசிய பொதுச்செயலாளர் அர்ஜுன் சிங் தெரிவித்துள்ளார்.
தீர்மாணம் நிறைவேற்றம்
இதில் பேசிய பிரதமர் மோடி, புதிய வேளாண் சட்டங்களால் ஏற்படும் நன்மைகள் குறித்து நாட்டு மக்களுக்கு பாஜகவினர் தெரியப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதன் பின், விவசாய துறையில் பிரதமர் மோடி செய்த சீர்திருத்தங்களுக்கு பாராட்டு தெரிவித்து தீர்மாணம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், கொரோனாவை வலிமையாக கையாண்டதற்காகவும் பிரதமரை பாராட்டி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், இந்தியா-சீனா எல்லைப்பிரச்சினையில் பிரதமர் மோடி அரசின் செயல்பாடுகள் குறித்தும் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
மேலும் படிக்க..
தமிழக சட்டப்பேரவையில் நாளை இடைக்கால பட்ஜெட் - ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்!!