Krishi Jagran Tamil
Menu Close Menu

காவிரி - குண்டாறு இணைப்பு திட்டம்! அடிக்கல் நாட்டி விவசாயிகளின் 100 ஆண்டு கால கனவு நிறைவேற்றினார் முதல்வர்!

Sunday, 21 February 2021 06:33 PM , by: KJ Staff
River Linking Project

Credit : Dinamani

நதிகளை இணைத்தால் விவசாயத் தேவைக்கும், குடிநீர்த் தேவைக்கும் தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்படாது என்பதால், கடந்த பல வருடங்களாக நதிகளை இணைக்க பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்திருந்தனர். பல ஆண்டு கால கோரிக்கைக்கு இன்று முதல் படியாக நதிகள் இணைப்பு திட்ட (Rivers Link Project) முதல் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. ரூ.6,941 கோடி மதிப்பில் நதிகள் இணைப்பு திட்ட முதல் கட்டிடத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி (CM Palanisamy) அடிக்கல் நாட்டினார்.

100 ஆண்டு கால கனவு

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே குன்னத்தூரில் ரூ.6,941 கோடி மதிப்பில் காவிரி-தெற்கு வெள்ளாறு-வைகை-குண்டாறு நதிகள் இணைப்புத் திட்ட (Rivers Link Project) முதல் கட்ட பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். மேலும் ரூ.3,384 கோடி மதிப்பில் விரிவாக்கம், புனரமைத்தல் மற்றும் நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ் காவிரி உபவடிநிலத்தில் உள்ள நீர்ப்பாசன உள்கட்டமைப்புகளை புனரமைக்கும் பணிகளுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார். வெள்ளக் காலங்களில் காவிரியில் (Cauvery) உபரியாக வெளியேறும் நீரை கரூர் மாவட்டம், மாயனூர் தடுப்பணையிலிருந்து திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களின் வறண்ட பகுதிகள் வழியாக குண்டாற்றுடன் இணைப்பதன் மூலமாக இப்பகுதி மக்களின் 100 ஆண்டு கால கனவு நிறைவேற்றப்படுகிறது.

விவசாயத்திற்குப் பாசன வசதி

காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டம் (Cauvery-Vaigai-Gundaru Link Project) மூலம் கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 69 ஆயிரத்து 962 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி (Irrigation) பெறும். இந்த திட்டம் மூலம் கரூர், திருச்சி, புதுக்கோட்டையில் குடிநீர் ஆதாரம் மேம்பட்டு நிலத்தடி நீர்மட்டமும் (Ground water) உயரும். விவசாயிகளின் பல ஆண்டு கனவை நிறைவேற்றும் விதமாக இன்று, தமிழக முதல்வர் அடிக்கல் நாட்டியிருப்பது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. விரைவில் இத்திட்டம் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வரும் வேண்டும்.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

மத்திய அரசின் புதிய PLI திட்டம்! ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு

மகளிர் சுய உதவிக் குழுவில் வீட்டிற்கு ஒரு பெண்! ஏழைப் பெண்களை தொழில்முனைவோராக்கும் முயற்சி!

100 year dream Former Delhi Chief Minister Cauvery - Gundaru Link Project முதல்வர் பழனிச்சாமி விவசாயிகளின் 100 ஆண்டு கால கனவு காவிரி - குண்டாறு இணைப்பு திட்டம்
English Summary: Cauvery - Gundaru Link Project! The Chief Minister fulfilled the 100 year dream of the farmers!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)

Share your comments


Krishi Jagran Tamil Magazine Subscription Online Subscription


Latest Stories

  1. 10 ரூபாயில் சூப்பர் திட்டம்! அரசு ஊழியர் அல்லாதவர்களும் பென்ஷன் பெற வாய்ப்பு!
  2. திருப்பூர் மாவட்டத்தில் 4 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையம்
  3. தென்னையில் ஊடுபயிராக சணப்பை சாகுபடி! மண்வளம் பெருகி மகசூல் அதிகரிக்கும்!
  4. அரசு பள்ளி ஆசிரியர் விளைவித்த பாரம்பரிய நெல்லை அறுவடை செய்த வேளாண் கல்லுாரி மாணவியர்கள்
  5. கோடைகாலப் பால் உற்பத்தி பாதிப்பு- தடுக்க என்ன செய்யலாம்?
  6. சரிந்தது சின்ன வெங்காயத்தின் விலை -மேலும் குறைய வாய்ப்பு!
  7. PAN மற்றும்-Aadhaar அட்டையை இணைக்கத் தவறினால், ரூ.10,000 அபராதம்!
  8. இயற்கை விவசாயத்திற்கு மானியம்-விண்ணப்பிக்க அழைப்பு!
  9. Free Cooking Gas: ஒரு கோடி ஏழைகளுக்கு இலவச சமையல் சிலிண்டர்- உடனே விண்ணப்பியுங்கள் !
  10. தனிநபர் சேமிப்பை மையப்படுத்தும் எல்ஐசியின் "பீமா ஜோதி" பாலிசி அறிமுகம்!!

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.