அரசாங்கம் வெளியிட்ட புதிய விதிகளின்படி, தற்போது வீடுகளில் வைத்திருக்கும் பழைய தங்க நகைகளுக்கும் ஹால்மார்க் போடுவது கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அது குறித்தும், இன்னும் விரிவான தகவலையும் இப்பதிவில் பார்க்கலாம்.
அரசாங்கம் இருக்கும் தங்க நகைகளை விற்பனை செய்வதற்கும், புதிய மற்றும் பழைய தங்க நகைகளை வாங்குவதற்கும் புதிய விதிகளை வெளியிட்டுள்ளது. அதோடு, அடையாளம் இல்லாத தங்க நகைகளை வாங்குவதற்கும், விற்பதற்கும் அரசு தடை விதித்துள்ளது. பழைய நகைகளை விற்பனை செய்வதற்கோ உருக்கவோ, புதிய நகைகளை ஆக்கவோ மாற்றம் செய்யவோ ஹால்மார்க் கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது.
அரசாங்கம் நகை விற்பனைக்கு எனத் தனியான புதிய விதிமுறைகளை வகுத்து இருப்பதால், ஹால்மார்க் கிடைக்கும் வரை வீட்டில் வைத்திருக்கும் பழைய நகைகளை உங்களால் விற்க முடியாது. தங்க நகைகளை வாங்குவது மற்றும் விற்பதற்கான தங்க ஹால்மார்க்கிங்க் குறித்து அரசு புதிய விதிமுறைகளை வெளியிட்டு இருக்கிறது. இந்த புதிய விதிகளின்படி, தற்பொழுது வீடுகளில் வைத்திருக்கும் பழைய தங்க நகைகளுக்கும் ஹால்மார்க் போடுவது கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. சென்ற ஏப்ரல் 1, 2023 முதல், அனைத்து தங்க நகைகள் மற்றும் கலைப்பொருட்கள் ஹால்மார்க் தனித்துவ அடையாள (HUID) எண்ணைக் கொண்டிருக்க வேண்டும் என்பதைப் புதிய விதிகள் தெரிவிக்கிறது. இருந்தாலும், புதிய நகைகள் அல்லது தங்கப் பொருட்களை வாங்குவதற்கு மட்டுமே ஹால்மார்க்கிங் பொருந்தும் என்று மக்கள் நம்பி வந்த நிலையில் தற்போது இந்த ஹால்மார்க்கிங் நகைகளை விற்பதற்கும் கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது.
இதுகுறித்து வெளியாகியுள்ள புதிய அறிக்கையின்படி, அரசாங்கம் இப்போது பழைய நகைகளை விற்பனை செய்வதற்கும் ஹால்மார்க்கை கட்டாயமாக்கி இருக்கிறது. BIS இன் படி, ஹால்மார்க் இல்லாத தங்க நகைகளை வைத்திருக்கும் நபர் அதை விற்பதற்கு முன் அல்லது புதிய வடிவமைப்பிற்கு மாற்றுவதற்கு முன்பாக கட்டாயமாக ஹால்மார்க் பெற வேண்டும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. நகை விருப்பமுள்ள வாடிக்கையாளர்கள் தாங்கள் பயன்படுத்திய நகைகளை ஹால்மார்க் செய்ய அவர்களுக்கு இரண்டு வகையான ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
ஹால்மார்க் செய்யப்பட்ட பழைய, ஹால்மார்க் இல்லாத நகைகளை, BIS பதிவு செய்யப்பட்ட நகைக்கடைக்காரர்களிடம் இருந்து பெறலாம். BIS பதிவுசெய்யப்பட்ட நகைக்கடைக்காரர், முத்திரையிடப்படாத தங்க ஆபரணங்களை ஹால்மார்க் பெறுவதற்காக BIS மதிப்பீடு மற்றும் ஹால்மார்க்கிங் மையத்திற்கு எடுத்துச் செல்வார். அடுத்ததாக BIS அங்கீகரிக்கப்பட்ட ஹால்மார்க்கிங் மையங்களில் நகைகளைப் பரிசோதித்து ஹால்மார்க் செய்துகொள்வது வாடிக்கையாளர்களுக்கான மற்றொரு விருப்பமாக இருக்கிறது.
ஆபரணங்களின் எண்ணிக்கை ஐந்து அல்லது அதற்கு மேல் இருந்தால் ஹால்மார்க்கிங் செய்ய, நுகர்வோர் ஒவ்வொரு நகைக்கும் ரூ.45 செலுத்த வேண்டும் எனக் கூறப்படுகிறது. அதுவே 4 துண்டு தங்க நகைகளுக்கு ஹால்மார்க் பெறுவதற்கு மக்கள் ரூ.200 செலுத்த வேண்டும் என்றும், BIS அங்கீகரிக்கப்பட்ட ஹால்மார்க்கிங் மையம் நகைகளை சரிபார்த்து அதற்கான சான்றிதழை வழங்கும் என்றும் கூறப்படுகிறது. நுகர்வோர் இந்த அறிக்கையை எந்த தங்க நகைக்கடை விற்பனையாளரிடமும் எடுத்துச் சென்று தனது பழைய முத்திரையிடப்படாத தங்க நகைகளை விற்பனை செய்து கொள்ளலாம் எனக் கூறப்படுகிறது.
மேலும் படிக்க
மாநிலம் முழுவதும் 50 திணை விற்பனை நிலையங்கள்: அரசு முடிவு!
போலி விவசாயி அடையாள அட்டை! திருப்பூர் உழவர் சந்தையில் பரப்பரப்பு!