News

Saturday, 10 July 2021 12:11 PM , by: Aruljothe Alagar

Tamilnadu

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பேருந்துகளின் சேவை தொடங்கிய நிலையில் முதல் நாளில்70 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டதாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தி்ல் கொரோனா தொற்றுகுறைந்து வருகிறது மேலும், பொதுமக்களின் அத்தியாவசிய தேவையைக் கருத்தில் கொண்டு எல்லா மாவட்டங்களிலும் பொது போக்குவரத்து தொடங்க அனுமதிக்கப்பட்டிருந்தது. தமிழக அரசின் உத்தரவை பின்பற்றி, குளிர் சாதன வசதி இல்லாமல் 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே பயணிகள் பயணிக்க அனுமதிக்கப்பட்டனர்

கொரோனாவை பொறுத்த வரை கடந்த மே 21ஆம் தேதி 36 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அதன்பிறகு பாதிப்புகள் வேகமாக சரிந்து வருகின்றன. தற்போது மேலும் சில மாவட்டங்களில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் 3.8 சதவீதம் பேர் முழுவதுமாக தடுப்பூசி போட்டுக் கொண்டனர். குறைந்தது 19 சதவீதம் பேர் ஒரு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

நாளுக்கு நாள் கொரோனா தோற்று பரவல் சரிந்து வருவதால் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதை தொடர்ந்து 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகள் செயல்பட அனுமதி அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இரவு 8 மணி வரை செயல்பட்டு வரும் கடைகள் 10 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகஸ்ட் முதல் வாரத்தில் கல்லூரிகளும், அதற்கடுத்த சில வாரங்களில் பள்ளிகளும் திறக்க வாய்ப்புள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் பொது போக்குவரத்து அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் பேருந்துகளில் கூட்டம் அதிகரித்துள்ளது. இவ்வாறு அதிகமாகும் கூட நெரிசலினால் கொரோனா பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு பேருந்துகளில் கூட்டம் அதிகரிக்காத வகையில் பேருந்து சேவைகளை அதிகரிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கொரோனா பரவலும் தடுக்கப்படுகிறது மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்படாது.

மேலும் படிக்க

ஜூலை 12 வரை ஊரடங்கு நீட்டிப்பு -தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான தளர்வுகள்!

ஜூலை 5-ம் தேதி வரை தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு! என்னென்ன தளர்வுகள்!

இந்த வாரம் முடியப்போகுது..! அடுத்த வாரம் என்னென்ன தளர்வுகள் அளிக்கலாம்! - அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)