மத்திய அரசு LPG சிலிண்டருக்கு மானியம் வழங்குகிறது. வழங்கி வரும் மானியத் தொகை உங்களுக்கு கிடைக்கவில்லையா? நீங்கள் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
அரசு தரப்பிலிருந்து வழங்கப்படும் மக்களுக்கு சரியான நேரத்தில் அக்கவுண்டிற்கு வந்து சேருவதில்லை என்ற குற்றசாட்டு இருந்து கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் இந்த மானிய தொகை மாறுபடும். ஊரடங்கில் மானியத்தொகை குறித்த பிரச்சனை வெடிக்க தொடங்கியுள்ளது.நிதி நெருக்கடி காரணமாக மானியத்தை நிறுத்தியுள்ளதாக அரசு அறிவித்திருந்தது. தற்போது மீண்டும் மானியத் தொகை அக்கவுண்டிற்கு வரத் தொடங்கியுள்ளது. எல்பிஜி ஐடியை இணைந்திருந்தால் வழங்கப்படும் இந்த மானியத்தொகை உங்களுக்கு வந்து சேரும். மானியத்தொகை உங்களுக்கு கிடைக்கவில்லையா? கிடைப்பதற்கு என்ன வேண்டும் என்று பார்க்கலாம்.
1. முதலில் www.mylpg.in என்ற குறிப்பிடப்பட்டுள்ள இந்த தளத்திற்குள் செல்ல வேண்டும்.
2. பின் வலதுபக்கத்தில் இருக்கும் ஐகான் மூலம் நீங்கள் பயன்படுத்தி வரும் சிலிண்டர் நிறுவனத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.
3. இப்போது sign in அல்லது sign up கேட்கும். ஐடி ஏற்கனவே உருவாக்கப்பட்டிருந்தால் அப்படியே login செய்யலாம் இல்லையென்றால் 'new user' என்ற ஆப்ஷனிற்கு செல்ல வேண்டும்.
4. அதன் பிறகு இப்போது புதிய விண்டோ ஓப்பன் ஆகும். அதில் இருக்கும் ’View Cylinder Booking History' என்பதை கிளிக் செய்யுங்கள்.
5. இதில் உங்களுடைய சிலிண்டர் மானியம் குறித்த அனைத்து தகவல்களும் இருக்கும். அதாவது மானியத் தொகை வந்த கடைசி தேதி, மற்றும் தேவையான அனைத்து தகவலும் இருக்கும். ஒருவேளை உங்களுக்கு மானிய தொகை வரவில்லை என்றால் ’ feedback’ என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும். அதில் நீங்கள் உங்களது புகாரை பதிவு செய்யலாம்.
இதுக் குறித்த மேலும் சந்தேகங்களுக்கு மற்றும் புகார்களுக்கு 18002333555 இந்த நம்பரில் அழைக்கவும்.
மேலும் படிக்க
குட் நியூஸ்: ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ நெய் வழங்கப்படும்!