1. செய்திகள்

குட் நியூஸ்: ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ நெய் வழங்கப்படும்!

T. Vigneshwaran
T. Vigneshwaran
Ration Card Update

உத்தரப்பிரதேசத்தில் பாரதிய ஜனதா தலைமையிலான அரசுக்கு தேர்தலுக்குப் பிறகு ரேஷன் திட்டத்தை நிறுத்துவதற்கான திட்டங்களை வகுத்துள்ளது என்று கூறியுள்ள சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், உத்தரப்பிரதேசத்தில் தனது ஆட்சி அமைந்தால் ஏழைகளுக்கு 5 ஆண்டுகளுக்கு இலவச ரேஷன் பொருட்களுடன் சேர்த்து, உங்கள் உடல் இன்னும் ஆரோக்கியமாக இருக்க ஒரு கிலோ நெய்யும் வழங்கப்படும் என்றார். மேலும் அகிலேஷ் யாதவ் கூறுகையில், "தற்போது ஏழைகளுக்கு கிடைக்கும் ரேஷன், தேர்தல் வரை மட்டுமே கிடைக்கும். தேர்தலுக்குப் பிறகு பாஜக ஆட்சி அமைத்தால் இலவச ரேசன் கிடைக்காது" என்றார்.

அகிலேஷ் கூறுகையில், "முன்னதாக இலவச ரேஷன் பொருட்கள் வழங்குவதை நவம்பர் மாதமே நிறுத்துவதற்கு பாஜக அரசு தயாராக இருந்தது. ஆனால் உத்தரபிரதேச தேர்தல் அறிவிக்கப்பட்டதால், ​​இலவச ரேஷன் திட்டம் மார்ச் வரை நீட்டிக்கப்பட்டது என்று கூறினார்.

ஒன்றிய பட்ஜெட்டில் ரேஷன் திட்டத்திற்கான பணம் எதுவும் ஒதுக்கப்படவில்லை. ஏனென்றால் தேர்தல் மார்ச் மாதம் முடியும் என்று பாஜகவுக்கு தெரியும். சோசலிஸ்டுகள் முன்பு கூட ரேஷன் வழங்கினர். சமாஜ்வாதி கட்சி ஆட்சி அமைத்தால், ஐந்து ஆண்டுகள் முழுவதும் ஏழைகளுக்கு ரேஷன் வழங்குவோம். இத்துடன், ஒரு வருடத்திற்குள் ரேஷனுடன் சேர்த்து கடுகு எண்ணெய் மற்றும் 2 சிலிண்டர்கள் வழங்குவோம், மேலும் ஏழைகளின் உடல் ஆரோக்கியத்துக்காக ஒரு கிலோ நெய்யும் வழங்கப்படும்.

பாஜக அரசால் விநியோகிக்கப்படும் ரேஷனின் தரம் மோசமாக இருப்பதாகவும், உப்பில் கண்ணாடித் துகள்கள் இருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளதாகவும் அகிலேஷ் குற்றம் சாடினார்.

உத்தரப் பிரதேசத்தில் 11 லட்சம் அரசுப் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், அந்தப் பணியிடங்களை நிரப்புவதன் மூலம் இளைஞர்களுக்கு சமாஜ்வாதி அரசு வேலைவாய்ப்பு அளிக்கும் என்றும் அவர் கூறினார்.

அகிலேஷ் மேலும் கூறுகையில், "பாஜக தலைவர்கள் வீடு வீடாக ஓட்டு கேட்டு வருகின்றனர். ஆனால், சில கிராமங்களுக்குச் சென்றபோது, ​​காலி கேஸ் சிலிண்டர்களை மக்கள் அவஅவர்களிடம் காட்டியதால், தற்போது அந்தப் பிரச்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது. மக்கள் காலி சிலிண்டர்களைக் காட்டிய நாளிலிருந்து, பாஜக தலைவர்களின் வீடு வீடு பிரச்சாரம் நிறுத்தப்பட்டது" என்றார்.

மேலும் படிக்க:

10,000 ரூபாயில் நல்ல பணம் சம்பாதிக்க தொழில்!

தங்கம் விலை: 8 மாத உச்சத்தில் இருந்து சரிவு!

English Summary: Good News: Ration card holders will be given a kilo of ghee! Published on: 17 February 2022, 06:53 IST

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.