முதியோரின் நலனைக் கருத்தில் கொண்டு முதியோருக்குக் கட்டணமில்லாமல் பேருந்தில் பயணம் செய்யக் கூடிய பஸ் பாஸ் பெற்றுக் கொள்வதற்கான தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் விரிவான தகவலை இப்பதிவு விளக்குகிறது.
மூத்த குடிமக்களான முதியோருக்குக் கட்டணமில்லா பேருந்து பயணத்திற்கான டோக்கன் ஜூன் 21 ஆம் தேதி முதல் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளிவந்துள்ளது. இந்த அறிவிப்பானது தற்பொழுது சென்னை பகுதிக்கு மட்டும் வந்துள்ளது. இந்நிலையில், சென்னை மாநகரில் இருக்கக் கூடிய 40 பணிமனைகளில் பஸ் பாஸினைப் பெறுவதற்கான டோக்கனை இம்மாதம் 21 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: DA Hike: அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்ந்தது!!
சென்னையில் வாழக்கூடிய மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லாமல் பயணம் செய்யக் கூடிய பேருந்து பயணத்திற்கான டோக்கன் ஜூன் 21 ஆம் தேதி முதல் வழங்கப்பட இருக்கிறது.
மேலும் படிக்க: ரேஷன் கடையில் இனி அரிசிக்கு பதிலாகக் கேழ்வரகு: தமிழக அரசு
சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டிற்கு மூத்தக் குடிமக்களுக்கு வழங்கப்படும் இலவச பஸ் பாஸ்-க்கான டோக்கன் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த நிலையில், வருகின்ற ஜூன் 21 ஆம் தேதி முதல் அவர்களுக்கான இலவச பஸ் பாஸ் வழங்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
கோழி வளர்ப்புக்குக் கடன் வழங்கும் வங்கிகள்! இன்றே பதிவு செய்யுங்கள்!!