ரேஷன் கடைகளில் கைரேகை பொருந்தவில்லை என்றாலும் ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி அதிரடியாக தெரிவித்துள்ளார். அமைச்சரின் இந்த அறிவிப்புக்கு மக்களிடையே அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இதன் மூலம் ரேஷன் கடைக்கு மீண்டும் மீண்டும் செல்லும் நிலை இனி இருக்காது என ரேஷன் அட்டைதாரர்கள் நம்புகிறார்கள்.
தமிழக சட்டப் பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.இதில் 2022-23 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையும்,, அதனைத் தொடர்ந்து வேளாண் பட்ஜெட் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், நிதிநிலை அறிக்கை தொடர்பாக விவாதம் இரண்டாவது நாளாக நடைபெற்றது. சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது ரேஷன் கார்டுகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதாவது தனி நபர் ரேஷன் கார்டு வழங்கப்படுமா என்றும். ரேஷன் கடைகளில் கைரேகை பொருந்தாமல் பொருட்கள் வழங்குவதில் சிக்கல் ஏற்படுகிறது.
எனவே இதனைத் தவிர்க்க என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றும் எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் கேள்வி எழுப்பினார்.இதற்கு பதிலளித்துப் பேசிய உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி,
யாரையும் சாராமல் தனியாக வாழும் நபர்களுக்கு ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.
ரேஷன் பொருட்கள்
மேலும், ரேஷன் கடைகளில் point of sale கருவியில் தொழில்நுட்பக் கோளாறுகள் இருந்தாலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு கைரேகை வைப்பதை கட்டாயம் ஆக்காமல் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது எனவும் point of sale கருவியில் தொழில்நுட்ப கோளாறுகள் சரி செய்யப்பட்டு வருகிறது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் படிக்க...
பளபளக்கும் பப்பாளி-ஆண்மைத்தன்மையை பாதிக்கும்!
இவற்றைத் தவிர்க்காவிட்டால், உங்கள் எலும்புகள் பொடிப்பொடியாவது உறுதி!