1. தோட்டக்கலை

பணம் காய்க்கும் செடி- வீண் செலவையும் குறைக்கும் யோகம்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Money plant- Yoga to reduce wasteful spending!

உங்கள் அதிர்ஷ்டத்தை மாற்றக்கூடிய ஒரு செடி உள்ளது. இதனை வீட்டில் வளர்ப்பதன் மூலம் வீணாகச் செய்யக்கூடிய செலவுகள் குறைவதுடன், பண வரவும் கிடுகிடுவென உயரும். நம்முடையப் பொருளாதார நிலையை மேம்படுத்தி, பண வரவை அதிகரிக்க இந்தச் செடி நிச்சயம் உதவும்.

மனித வாழ்க்கையின் பெரும்பாலான நாட்களை இந்தப் பணத்தைத் தேடுவதிலேயே விட்டுவிடுகிறோம். ஏனெனில், வாழ்க்கைக்குப் பணம் மிகவும் அத்தியாவசியம். அதனால்தான் காலம் முழுக்க நிம்மதியாக இருக்க வேண்டுமானால், உடலில் தெம்பு இருக்கும்போதே, அதாவது இளம் வயதிலேயேக் கடுமையாக உழைத்துப் பணத்தைச் சேமித்து வைப்பதே புத்திசாலித்தனம்.அப்படி கடின உழைப்பு மற்றும் அதிர்ஷ்டத்துக்கும் முக்கியப் பங்கு உண்டு.


மரங்கள் மற்றும் தாவரங்களை வழிபடுவது பற்றி வேதங்களிலும் புராணங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தவிர, சில சிறப்பு மரங்கள் மற்றும் தாவரங்கள் பற்றி வேத ஜோதிடம் மற்றும் வாஸ்து சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றை வீட்டில் நடுவதன் மூலம் அதிர்ஷ்டத்தை மாற்றலாம்.

வீட்டில் பணம் சேரும்

அன்னை சரஸ்வதியின் அருளில்லாமல் வீட்டில் அன்னை லட்சுமியின் வருகை சாத்தியமில்லை என்று வாஸ்து சாஸ்திர நிபுணர்கள் கூறுகிறார்கள்.
இதற்கு உதவும் செடி ஒன்று உள்ளது. இந்த செடியின் பெயர் மயூர்பங்கி, அதாவது மயில் இறகு. இது கல்வியின் தாவரம், வித்யா செடி என்றும் அழைக்கப்படுகிறது.இந்தச் செடியை வீட்டில் நடுவதால் பணம் வந்து கொண்டே இருக்கும். இந்த செடி நடப்பட்ட இடத்தில், பணம் ஈர்க்கப்படுகிறது என்று நம்பப்படுகிறது.

மயில் இறகு

வாஸ்து சாஸ்திரத்தின் படி, இந்த செடியை வடக்கு திசையில் நட வேண்டும். இந்த திசை நுண்ணறிவு திசை என்றும் அழைக்கப்படுகிறது. நீங்கள் இந்த செடியை ஒரு தொட்டியில் நடும் எண்ணத்தில் இருந்தால், வடக்கு திசையியையே பயன்படுத்துவது நல்லது. இப்படிச் செய்வதன் மூலம் படிப்படியாக நிதி நிலைமை மேம்படும். அதே சமயம் ஊதாரித்தனத்தையும் இது போக்குகிறது.

மேலும் படிக்க...

நெல் மூட்டைகளை அடகு வைத்து கடன்- சாமர்த்தியமாகச் சுருட்டிய விவசாயி!

அன்னை வைஷ்ணவ தேவி உருவம் பதித்த நாணயம் - லட்சாதிபதி ஆக வாய்ப்பு!

English Summary: Money plant- Yoga to reduce wasteful spending! Published on: 21 March 2022, 08:38 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.