News

Tuesday, 18 April 2023 02:29 PM , by: R. Balakrishnan

Gold For Thali

தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பாக கொள்கை விளக்க குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் பெண்களுக்கான திருமண நிதியுதவி திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளது.

ரூ.1,000 நிதியுதவி

தமிழகத்தில் கடந்த ஆட்சியில் பெண்களுக்கு உதவும் வகையில் தாலிக்கு தங்கம் திட்டம் என்ற நடைமுறையில் இருந்தது. தற்போது இந்தத் திட்டம் புதுமைப்பெண் திட்டம் என்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்று உயர்கல்வி சேரும் பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.

அதனால் இனி ‘தாலிக்கு தங்கம்’ திட்டம் செயல்படாது அதற்கு பதிலாக புதுமைப்பெண் திட்டம் நடைமுறையில் இருக்கும். இந்த நிலையில் தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை வெளியிட்டுள்ள கொள்கை விளக்க குறிப்பில் பெண்களுக்கு உதவும் வகையில் பல்வேறு திருமண நிதியுதவி திட்டங்கள் உள்ளது என்று தெரிவித்துள்ளது.

அதாவது டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் நினைவு கலப்பு திருமண நிதி உதவி திட்டம், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண உதவி திட்டம், ஈ வே ரா மணியம்மையார் நினைவு ஏழை விதவை மகள் திருமண நிதி உதவி திட்டம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண உதவித்திட்டம் போன்ற திட்டங்கள் அமலில் உள்ளது. இதன் கீழ் நிபந்தனைகளுக்கு உட்பட்டு விண்ணப்பித்து பயன்பெறலாம்.

மேலும் படிக்க

இயற்கை விவசாயத்திற்கு மவுசு: திருப்பதி லட்டு இனி இப்படித் தான் தயாரிக்கப்படும்!

குடும்ப தலைவிகளுக்கு 1,000 ரூபாய்: வெளியான முக்கிய அப்டேட்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)