
இனிமேல் அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மூலம் பொருட்களை பெற்றுக் கொள்வதற்கான படிவத்தை ரேஷன் கடைகளிலே பெற்று பூர்த்தி செய்து அவர்களிடமே பொருட்களை வழங்க வேண்டும்
முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு, அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மூலம் பொருட்களை வழங்கலாம் என்று உணவுப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை மூலம், நியாய விலைக் கடைகளுக்கு வர இயலாத முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், தங்களால் தேர்வு செய்யப்பட்ட நபர்களை கடைக்கு அனுப்பி பொருட்களை பெறும் வகையில் ஏற்கனவே நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த உத்தரவை நியாய விலைக்கடை ஊழியர்கள் பின்பற்றுவதில்லை என்று தொடர்ந்து புகார் வந்துள்ளதாலும், இனிமேல் தெரிவுசெய்யப்பட்ட நபர்கள் மூலம் பொருட்களை பெற்றுக்கொள்வதற்கான படிவத்தை ரேஷன் கடைகளிலே பெற்று பூர்த்தி செய்து அவர்களிடமே பொருட்களை வழங்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளது.
மேலும் பொது விநியோக திட்டத்தை சாராத பொருட்களை எக்காரணம் கொண்டு கட்டாய விற்பனை செய்யக்கூடாது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:
Ration card: அரசு அளிக்கும் நன்மையை பெற ரேஷன் கார்டில் மாற்றமா?