MFOI 2024 Road Show
  1. மற்றவை

Ration card: அரசு அளிக்கும் நன்மையை பெற ரேஷன் கார்டில் மாற்றமா?

T. Vigneshwaran
T. Vigneshwaran
Ration card Update

தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தல்களில் திமுக வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது. பல தேர்தல் வாக்குறுதிகளை அளித்த திமுக ஒவ்வொன்றாக செயல்படுத்தத் தொடங்கியுள்ளது.

திமுக-வின் தேர்தல் அறிக்கையில், குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகையாக மாதாமாதம் 1000 ரூபாய் அளிக்கப்படும் என்று அளிக்கப்பட்ட வாக்குறுதி அனைவரின் கவனத்தை கவரும் வகையில் அமைந்தது. ஆவின் பால் விலை குறைப்பு, கொரோனா நிவாரண நிதியாக குடும்பத்துக்கு 4000 ரூபாய், சாதாரண நகரப்பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம் போன்ற வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டன.

இந்த நிலையில், குடும்பத் தலைவிகளுக்கான வாக்குறுதியையும் அரசு விரைவில் நிறைவேற்றும் என்று பெண்கள் காத்திருக்கின்றனர். இது தொடர்பாக சமீபமாக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணியிடம் கேட்டபோது, அவர், இது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாகத் கூறினார். நிதிநிலை ஆராயப்பட்ட பின்னர் இது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் ,மேலும் தகவலை முதல்வர் சரியான நேரத்தில் அறிவிப்பார் என்றும் கூறினார்.

இதற்கிடையில் எந்தெந்த ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000 ஊக்கத்தொகை கிடைக்கும் என்ற பெரிய குழப்பமும் மக்களிடையே பரவி வருகிறது. ரேஷன் அட்டையில் குடும்பத் தலைவியின் பெயர் இருந்தால் போதுமா? புகைப்படமும் இருப்பது அவசியமா? என்று பல கேள்விகள் மக்களிடம் எழுந்தது.இதன்பொதிலும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் தமிழக அரசு வெளியிடவில்லை.

இதற்கிடையில், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, ரூ.1000 பெறும் வகையில் ரேஷன் கார்டுகளில் தேவையான மாற்றங்களை செய்து தருவதாக கூறி சில மோசடி நபர்கள் மக்களை ஏமாற்றி வருகிறார்கள் என்று பல புகார்கள் வந்துள்ளன.

ரூ.1000 பெற குடும்பத் தலைவியின் பெயரையோ அல்லது புகைப்படத்தையோ ரேஷன் அட்டையில் மாற்ற விரும்பினால் அல்லது புதுப்பிக்க வேண்டுமென்றால், அதை ஆன்லைனில் செய்து முடிக்கலாம். எப்படி என்று பாருங்கள்.

 

இதற்கான வழிமுறைகள்:

  • தமிழக அரசின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.tnpds.gov.in-க்கு செல்ல வேண்டும்.
  • பயனாளர் நுழைவு’ என்ற டேப்பை கிளிக் செய்து உள் நுழைக
  • அடுத்து, உங்கள் பதிவு செய்யப்பட்ட உங்களது மொபைல் போன் எண்ணை பதிவிடவும்.  பின்னர், கேப்ட்சா குறியீட்டை  உள்ளிடவும்.
  • அடுத்து  ‘குடும்ப உறுப்பினர்கள்’ என்பதை தேர்வு செய்யவும். இதில் நீங்கள் குடும்ப தலைவர் மற்றும் பிற உறுப்பினர்களின் பெயர்களை பார்க்கலாம்.
  • இதில் புகைப்படத்தை மாற்ற, அட்டை பிறழ்வுகள் என்னும் பிரிவை தேர்வு செய்யவும்.
  • அதன் பிறகு, புதிய கோரிக்கையை தேர்ந்தெடுத்து, அதில் புகைப்படம் அல்லது பெயர்  மாற்றத்தை செய்யலாம்.
  • தேவையான மாற்றங்களை செய்த பின்னர் ‘ஓகே’ கொடுத்து சமர்ப்பிக்கவும்.
  • நீங்கள் சரிசெய்த அணைத்து மாற்றங்களும் புதுப்பிக்கப்படும்.
  • ஆன்லைனில் இந்த செயல்முறையை எளிதாக செய்யலாம். மோசடி நபர்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகின்றது.

மேலும் படிக்க:

சாலையோர வியாபாரிகள் ரூ.10,000 உடனடிக் கடன் பெறும் SVANidhi திட்டம்!

10 கோடி விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் புதிய திட்டம் தொடக்கம்.

English Summary: Ration card: Is there a change in the ration card to get the benefit provided by the government? Published on: 24 July 2021, 04:00 IST

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.