திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களைச் சோந்த உணவுப்பொருள் வழங்கல் துறை அலுவலா்களின் ஆய்வுக் கூட்டம் நேற்று ஜூலை 14 ஆம் தேதி நடைபெற்றது. இதில் அமைச்சர் சக்கரபாணியும் கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், தமிழகத்தில் 1,000 குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள ரேஷன் கடைகள் 5000த்துக்கும் மேல் உள்ளன. அவற்றை உடனடியாக பிரிக்க முதல்வா் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா். கன்னியாகுமரியில் 8, திருநெல்வேலியில் 158, தென்காசியில் 140, தூத்துக்குடியில் 116 கடைகளில் 1,000 குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ளன. அந்த கடைகளைப் பிரித்து பகுதிநேரக் கடைகள் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
ஒவ்வொரு ரேஷன் கடைகளுக்கு இடையே 1.5 கி.மீ. தொலைவு இருக்க வேண்டும் என்று விதிமுறை உள்ளது. சபாநாயகர் அப்பாவு, ஒரே இடத்தில் 80 குடும்ப அட்டைகள் இருந்தாலும், அங்கும் பகுதிநேரக் கடை அமைக்கலாம் எனக் கூறியுள்ளாா்.
ரேஷன் கடை விஷயத்தில் மக்களின் கோரிக்கைகளை முதல்வரின் முன் கொண்டுசெல்வோம். நடமாடும் ரேஷன் கடைகளுக்கான வாடகையை பொதுமக்களிடம் வசூலிப்பதாக புகாா் வந்துள்ளதாகவும் இது குறித்தும் முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச்செல்வோம் என்றும் கூறியுள்ளார்.
ரேஷன் கடை விஷயத்தில் மக்களின் கோரிக்கைகளை முதல்வரின் முன் கொண்டுசெல்வோம். நடமாடும் ரேஷன் கடைகளுக்கான வாடகையை பொதுமக்களிடம் வசூலிப்பதாக புகாா் வந்துள்ளதாகவும் இது குறித்தும் முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச்செல்வோம் என்றும் கூறியுள்ளார்.
விண்ணப்பித்தோருக்கு திமுக ஆட்சிக்கு வந்ததும் குடும்ப அட்டைகள் வழங்கப்படும் என்று தோதல் பிரசாரத்தில் முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின்போது, விண்ணப்பித்த 15 நாளில் குடும்ப அட்டை வழங்கப்படும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டாா். இது, ஜூலை 1ஆம் தேதிமுதல் நடைமுறைக்கு வந்துள்ளது. அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் 10 பேருக்கு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
கடந்த 10 ஆண்டுகளாக நியாயவிலை கடைகளில் யாரும் சென்று ஆய்வு நடத்தவில்லை. இப்போது முதல்வரே நேரடியாக ஆய்வு செய்கிறாா். இதுதவிர, ஆட்சியா்கள் மாதம் முழுவதும் 10 ரேஷன் கடைகளில் ஆய்வு நடத்த முதல்வா் உத்தரவிட்டுள்ளார். கூட்டுறவுத் துறை இணைப் பதிவாளா்கள் 30 கடைகளில் ஆய்வு செய்ய வேண்டும் என்றும், மக்களவை, பேரவை உறுப்பினா்களும் ஆய்வு நடத்த வேண்டும் என்றும் முதல்வா் சுற்றறிக்கை அனுப்பியுள்ளாா்.
தமிழகத்தில் சுமாா் 2.90 கோடி அரிசி குடும்ப அட்டைகள் உள்ளன. முதல்வரின் நலத்திட்ட அறிவிப்புகளை அடுத்து சா்க்கரை அட்டை வைத்திருப்போா்கூட அரிசி அட்டை பெற விண்ணப்பித்துள்ளனா். வாடகைக் கட்டடங்களில் உள்ள ரேஷன் கடைகளுக்கு உணவுத் துறை மூலம் சொந்தக் கட்டடம் கட்ட கோரிக்கை முன்வைத்துள்ளார். முழுநேரக் கடைகளில் அதிகளவிலும், பகுதிநேர கடைகளில் குறைந்த அளவிலும் பொருள்கள் இருக்கின்றன. எனவே, அதற்கேற்ப கடைகள் கட்ட ஆலோசனை வழங்கியுள்ளனர். அடுத்த 2 ஆண்டுகளுக்குள் அனைத்து ரேஷன் கடைகளும் சொந்தக் கட்டிடத்தில் இருக்கும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க:
விண்ணப்பித்த 15 நாளில் புதிய ரேஷன் கார்டு - ஆளுநர் உரையில் தகவல்!!