விவசாயத்திற்கு முக்கிய ஆதாரமாகத் திகழ்வது மண்ணும், நீரும் தான். மண் இல்லாமல், தண்ணீரை மட்டும் கொண்டு விவசாயம் செய்யும், ஹைட்ரோபோனிக்ஸ் (Hydroponics) முறையும் நடைமுறையில் உள்ளது. தற்போது, கடற்கரை மணலிலும் (Beach Sand) விவசாயம் செய்யும் புதிய முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடற்கரை மணலில் விவசாயம்:
மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லுாரியின் தாவரவியல் பேராசிரியராகப் (Professor of Botany) பணியாற்றி வரும் ராஜேந்திரன், கல்லுாரியின் ரூரல் பயோ டெக்னாலஜி யூனிட் ஒருங்கிணைப்பாளராக உள்ளார். தொடர்ந்து பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்தி கொண்டிருக்கும் இவர், தற்போது கடற்கரை மணலிலும் விவசாயம் (Agriculture on beach sand) செய்ய முடியும் என்பதை நிரூபித்துள்ளார்.
கடற்பாசிகளைப் பயன்படுத்தி விவசாயம்:
ஆற்றுமணல், கடற்கரை மணலில் ஆர்கானிக் கார்பன் (Organic carbon) இருக்காது. ஆர்கானிக் கார்பனால் எந்தவிதப் பயனும் இல்லை. இந்த மணலை, கெட்டிப்படுத்துவதன் மூலம் உறுதியாக்கலாம். இதற்கு கடற்பாசியைப் (Sponge) பயன்படுத்த வேண்டும். நீலம், பச்சை, சிவப்பு, பழுப்பு என எந்த நிற கடற்பாசியையும் ஆய்வகத்தில் (laboratory) வேகவைத்து பசையாக்கி மணலுடன் கலந்தால் கெட்டியாகி விடும். இதில் விதை போட்டு செடிகள் நடலாம். தண்ணீர் விடும் போது, சற்றே இளகி நீரை உள்ளே உறிஞ்சும். களிமண் (Clay) போல மீண்டும் இறுகிவிடாது. அதனால் செடியின் வேர்கள் சுவாசிக்க முடியும். இந்த தொழில் நுட்பத்தில் மணலுடன் ஆர்கானிக் கார்பன், தாது உப்புகள் சேர்க்கப்படுவதால் செடிகள் நன்றாக வளரும், என்றார்.
சந்தேகங்களுக்கு தொடர்பு கொள்ள:
திரு. ராஜேந்திரன்,
தாவரவியல் பேராசிரியர்,
94439 98480.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க...
விதைகளைப் பாதுகாக்கும் வசம்பு எண்ணெய்! தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் கண்டுபிடிப்பு!
சுயதொழிலில் திருநங்கைகள் ஆர்வம்! பசுமாடு வளர்த்து பால் வியாபாரம்!