Krishi Jagran Tamil
Menu Close Menu

சுய தொழிலில் திருநங்கைகள் ஆர்வம்! பசுமாடு வளர்த்து பால் வியாபாரம்!

Saturday, 17 October 2020 12:20 PM , by: KJ Staff

Credit: Hindu Tamil

மதுரை, மதிச்சியம் பகுதியில் 12 திருநங்கைகள் (Transgender) சேர்ந்து, பசு மாடுகள் வளர்த்து சொந்தமாக பால் வியபாரம் (Dairy business) செய்து வருகின்றனர்.

வாழ்வாதாரம் பாதிப்பு:

குடும்ப உறுப்பினர்களால் கைவிடப்பட்ட திருநங்கைகள், இந்த சமூகத்தாலும் ஒதுக்கப்பட்டு, விழிப்புநிலை மக்களாக வசிக்கின்றனர். சாதாரண மக்களுக்கே நகர்புறங்களில் வாடகைக்கு வீடு கொடுக்க அவர்கள் சாதி, மதம், பணிபுரியும் இடம் உள்ளிட்ட கவுரவம் பார்க்கும் இந்த சமூகத்தில் திருநங்கைகளுக்கான வாழ்வாதாரம் (Livelihood) நிரந்தர கேள்விகுறியாகவே நீடிக்கிறது. அவர்களின் பாலின சிக்கல் காரணமாக தனியார் நிறுவனங்களும், அவர்களைப் பணியில் சேர்த்துக்கொள்வதில்லை. அதனால், அவர்கள் அன்றாட வாழ்வாதாரத்திற்காக சாலையோர கடைகளில் யாகசம் கேட்கும் பரிதாப சூழலில் வசிக்கிறார்கள்.

பால் வியாபாரம்:

கொரோனா ஊரடங்கால் (Lockdown) நிறுவனங்கள், கடைகள் எதுவும் 5 மாதத்திற்கும் மேலாக திறக்கப்படாததால் திருநங்கைகள் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கிப்போனது. அன்றாட சாப்பாட்டிற்கே வழியில்லாமல் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். மதுரை மதிச்சியம் பகுதியில், நிறைய கும்மி பாட்டுக் கலைஞர்கள், கரகாட்ட கலைஞர்கள் உள்ளனர். இவர்களுடன் இந்த திருநங்கைகளும் சேர்ந்து, கும்மிப்பாட்டு பாடவும், கரகாட்டம் ஆடவும் சென்று வந்துள்ளனர்.

Credit: Dinakaran

சிரமத்தில் திருநங்கைகள்:

திருவிழா இல்லாத காலங்களில் கடைகளில் யாகசம் பெற்று வந்தனர். கொரோனா ஊரடங்கால் திருவிழாக்களும் இல்லாமல், யாகசம் பெறவும் வழியில்லாமல், திருநங்கைகள் அன்றாட சாப்பாட்டிற்கே மிகுந்த சிரமப்பட்டுள்ளனர். அதனால், இந்த 12 திருநங்கைகளும் ஒன்று சேர்ந்து 2 பசு மாடுகளை (2 cows) வாங்கி கடந்த 2 மாதமாக வெற்றிகரமாக சொந்தமாக பால் வியாபாரம் செய்வருகின்றனர்.

திருநங்கைகள் கூறியது:

எந்த அனுபவமும் இல்லாமல் தான் பசு மாடுகளை வாங்கினோம். காலையில் 2 பசு மாடுகளையும், வைகை ஆற்றங்கரையோரத்தில் மேய்ச்சலுக்கு அழைத்து செல்வோம். மதியம் தண்ணீர் காட்டுவோம். மாலையில் புல், வைக்கோல் (Straw) வாங்கிப்போடுகிறோம். 2 பசு மாட்டிலும் தினமும் காலையும், மாலையும் 12 லிட்டர் பால் கிடைக்கிறது. பண்ணைக்காரர்கள் நேரில் வந்து பால் கறந்து, எடுத்து சென்றுவிடுகின்றனர். செலவு எல்லாம் போக ரூ.500 கிடைக்கிறது.

இந்தத் தொழில் கவுரவமாகவும், அன்றாடம் நிரந்தரமாக (Permanently) வருமானமும் கிடைப்பதால், நிரந்தரமாகவே இனி இந்தத் தொழிலை செய்வதற்கு மிகுந்த ஆர்வமாக உள்ளது. ஆனால், இந்த வருமானம் 12 பேருக்கு போதுமானதாக இல்லை. கூடுதலாக இன்னும் 2 பசு மாடுகள் வாங்கினால் நாங்கள் யாரிடமும் யாகசம் பெறாமல் இந்தத் தொழிலை செய்து பிழைத்துக் கொள்வோம். எங்களை போன்றவர்களுக்கு வேலைவாய்ப்பும் (Job Opportunity) வழங்க முடியும் என்று திருநங்கைகள் கூறியுள்ளனர்.

சுய தொழில்:

மதுரை மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திருநங்கைகள் உள்ளனர். மாவட்ட நிர்வாகம், மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை (District Veterinary Care Department), சமூக நலத்துறை, வங்கிகள் ஆகியவை இணைந்து அவர்கள் சுய தொழில் (Self-employment) செய்யவும், தனியார் நிறுவனங்களில் பணிபுரியவும் தேவையான உதவிகள் செய்ய வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

கால்நடை வளர்ப்போர் - மேய்ப்போர் பல வாரியத்தை, தமிழக அரசு உடனே அமைக்க வலியுறுத்தல்!

நாமக்கல் மருத்துவக் கால்நடை பல்கலைகழகத்தில், வேலை வாய்ப்பு! விபரம் உள்ளே!

Transgender Livestock
English Summary: Transgender people interested in self-employment! Cow Dairy Business!

Share your comments


Krishi Jagran Tamil Magazine Subscription Online Subscription


Latest Stories

  1. 45 நிமிடத்தில் கடன் வழங்கும் SBI! - உங்களை தேடி வரும் சூப்பர் திட்டம்!
  2. தமிழக மக்களுக்கு இலவச கொரோனா தடுப்பூசி- முதலமைச்சரின் அதிரடி அறிவிப்பு!
  3. ABVKY : அடல் பிமித் வியக்தி கல்யாண் யோஜனா மூலம் வேலை இழந்தவர்கள் சம்பளம் பெறுவது எப்படி?
  4. கோயம்புத்தூர் உழவர் சந்தையில் காய்கறிகள் விலை பற்றிய ஆய்வு!
  5. காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வட தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு!!
  6. முருங்கை சாகுபடியை ஊக்குவிக்க, தோட்டக்கலை துறைக்கு ரூ. 5கோடி நிதி ஒதுக்கீடு!
  7. கதிர் அடிக்கும் களங்கள் இல்லாததால் விவசாய பொருட்களை சாலையில் உலர வைக்கும் விவசாயிகள்!
  8. கிசான் முறைகேடு : பணத்தை திரும்ப செலுத்தாவிட்டல் அரசு சலுகைகள் நிறுத்தம்!
  9. பாதுகாப்பான வாழ்க்கைக்கு பாரம்பரிய அரிசி வகைகள் !
  10. ஏழைகளின் குளுக்கோஸ் இளநீர் - நன்மைகள்!!

CopyRight - 2020 Krishi Jagran Media Group. All Rights Reserved.