News

Tuesday, 22 February 2022 01:48 PM , by: Deiva Bindhiya

Offer: If you buy groceries, Tickets for Vallimai movie is free

பிரபல பாலிவுட் தயாரிப்பாளர், போனிகபூர் தயாரிப்பில், அஜித் நடித்துள்ள படம் வலிமை. எச்.வினோத் இயக்கி உள்ள இப்படத்தில் நடிகர் அஜித் போலீஸ் அதிகாரியாக வலம் வருவார். இப்படத்தில் ஹீரோயினாக காலா பட நடிகை ஹூமா குரேஷி நடித்திருக்கிறார். மேலும் பிரபல காமேடி நடிகர் யோகிபாபு, குக் வித் கோமாளி புகழ் ஆகியோர் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருப்பது குறிப்பிடதக்கது.

இப்படத்தில் வில்லன் கேரக்டரில் பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா (Karthikeya) நடித்திருக்கிறார். யுவன் மற்றும் ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்திருப்பது, சிறப்பாகும். இப்படத்தின் பணிகள் நிறைவு பெற்று ரிலீசுக்கு தயாராக உள்ளது.

அதன்படி வருகிற பிப்ரவரி 24-ந் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய 4 மொழிகளில் இப்படத்தை ரிலீஸ் செய்ய இருக்கின்றனர், படக்குழு. ரிலீஸ் நெருங்கி வருவதால் இதற்கான பணிகளும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளன.

வலிமை (Valimai) படத்தின் ரிலீசுக்கு இன்னும் இரண்டு நாட்களே மிஞ்சி உள்ளதால், திரையரங்குகளில் முன்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெறுகிறது. பெரும்பாலான திரையரங்குகளில் முதல் நாள் டிக்கெட் முழுவதுமாக விற்றுத்தீர்ந்தன, என கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில், வலிமை படத்தின் டிக்கெட் இலவசமாக பெற ஒரு அறிய வாய்ப்புக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி மத்திய அரசின் தென்னிந்திய பன்மாநில கூட்டுறவு அங்காடி (SIMCO) மையத்தில் ரூ. 2999-க்கு மேல் மளிகை பொருள் வாங்கும் வாடிக்கையாளருக்கு, வலிமை (Valimai) படத்தின் டிக்கெட் இலவசமாக வழங்கப்படும் என்று அதிரடி ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டிக்கெட்டின் மதிப்பு ரூ.500 இருக்கும் என்று கூறப்படுகிறது. இதில் பாப்கார்ன், கூல்டிரிங்ஸ் ஆகியவையும் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பது சிறப்பாகும்.

மேலும் படிக்க:

தமிழகம்: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு: வெற்றி கண்டது யார்யார்?

7th Pay Commission குட் நியூஸ்: 34% டி ஏ பற்றிய முக்கிய அப்டேட் அறிந்திடுங்கள்

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)