1. செய்திகள்

தமிழகம்: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு: வெற்றி கண்டது யார்யார்?

Deiva Bindhiya
Deiva Bindhiya
Tamil Nadu: local body election vote

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. இவற்றில் மொத்த வார்டுகளின் எண்ணிக்கை 12,838 ஆகும். இந்த வார்டுகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக கடந்த 19 ஆம் தேதி நடைபெற்று நிறைவடைந்தது. தமிழகத்தில் 60.7 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியிருப்பது குறிப்பிடதக்கது.

பேரூராட்சிகள், நகராட்சிகளில் வாக்குப்பதிவு சற்று அதிகமாக இருந்தாலும், மாநகரப் பகுதிகளில் மந்தமாகவே காணப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.

இந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இதையடுத்து வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு எண்ணிக்கை நடந்து வருகிறது. இதுதவிர மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை மற்றும் வெளியே கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டு தேர்தல் அலுவலர்களால் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.

வெற்றி பெற்ற வேட்பாளர்கள் மற்றும் பேரூராட்சிகள் (Winning candidates and municipalities

  • புதுக்கொட்டை நகராட்சி 4ஆவது வார்ட்டில் விஜய் மக்கள் வேட்பாளர் பர்வேஷ் வெற்றி பெற்றுள்ளார்.
  • பரமக்குடி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 1,2,4,5 வார்டுகளில் திமுக வெற்றி கண்டுள்ள நிலையில் 3,6,7,8 வார்டுகளில் அதிமுக வெற்றிக்கண்டுள்ளது.
  • திருப்பூர் மாவட்டம் கொளத்தூர்பாளையம் பேரூராட்சி 1வது வார்ட்டில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கலைப்பிரியா வெற்றி பெற்றுள்ளார்.
  • பழனி அருகே கீரனூர் பேரூராட்சி 3வது வார்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வெற்றி கண்டுள்ளது மற்றும் 4 வது வார்டில் திமுக வெற்றி
  • கோவை கருமத்தம்பட்டி நகராட்சி 1-வது வார்டில் திமுக வேட்பாளர் வாணி ஸ்ரீ 504 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். கருமத்தம்பட்டி நகராட்சி 2வது வார்டு திமுக வேட்பாளர் ரமேஷ் 467 வாக்குகள் பெற்று வெற்றியை தன்வசப்படுத்தியுள்ளார். கருமத்தம்பட்டி நகராட்சி 3வது வார்டு திமுக வேட்பாளர் பழனியம்மாள் 378 வாக்குகள் பெற்று வெற்றி கண்டுள்ளார்.
  • திண்டுக்கல்: நத்தம் பேரூராட்சியில் 2 வார்டுகளில் திமுக வெற்றி பெற்றது.

மேலும் படிக்க:

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு! விண்ணப்பிக்க கடைசித் தேதி!

900 தன்னாட்சிக் கல்லூரிகளில் ஆன்லைன் பட்டப்படிப்பிற்கு UGC அனுமதி..

English Summary: Tamil Nadu: local body election vote: Who won Published on: 22 February 2022, 10:54 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.