News

Thursday, 12 May 2022 12:11 PM , by: Elavarse Sivakumar

பழைய ஓய்வூதிய திட்டம் தமிழகத்தில் அமல்படுத்தப்படுவது குறித்து, சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறிய கருத்து பெரும் எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ளது.

பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த முடியாது என நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சட்டமன்றத்தில் பேசியதாக கடந்த இரு தினங்களாக செய்திகள் பரவி வந்தன. இதுகுறித்து கூட்டணிக் கட்சிகளே குரல் எழுப்பி வரும் நிலையில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பதில் அளித்துள்ளார்.

​பழைய ஓய்வூதியத் திட்டம்

2003ஆம் ஆண்டு வரை பழைய ஓய்வூதிய திட்டம் அமலில் இருந்தது. பின்னர் 2004ஆம் ஆண்டு முதல் தற்போது வரை சிபிஎஸ் (Contributory Pension Scheme) எனப்படும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது.

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர்கள் வெகுநாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுகுறித்து முந்தைய ஆட்சிக்காலங்களிலும் அரசு ஊழியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

​திமுக வாக்குறுதி

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என 2021 சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில் திமுக வாக்குறுதி அளித்திருந்தது. இதனால் அரசு ஊழியர்களின் பெருவாரியான ஆதரவு திமுகவுக்கு கிடைத்தது.
​பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த முடியாது என நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வெளியானத் தகவல்  அதிர்ச்சியளிப்பதாக அரசு ஊழியர்கள் தெரிவித்திருந்தனர்.

பேசியது என்ன?

சட்டமன்றத்தில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியபோது, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதில் இருக்கும் சிக்கல்களை பற்றி பேசினார். இறுதியாக, பழைய பென்சன் திட்ட விவகாரத்தில் முதல்வரும், அவை முன்னவரும் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டு செயல்படுத்துவேன் என நிதியமைச்சர் பிடிஆர் தெரிவித்தார்.

ஆக, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுக்கும் முடிவே இறுதியானது என்பது உறுதியாகிவிட்டது. இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் விரைவில் முடிவெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க...

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)