News

Thursday, 10 February 2022 05:27 PM , by: Elavarse Sivakumar

ஒமிக்ரான் தொற்றால் இதுவரை உலக நாடுகளில் 5 லட்சம் பேர் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. ஒமிக்ரான் தொற்றால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் இறப்பு எண்ணிக்கை வியக்க வைத்தாலும், அதன் உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கும் என உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது.

துரத்திய ஒமிக்ரான்

கொரோனா தொற்றின் மாறுபாடாகக் கருதப்படும் ஒமிக்ரான் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் தென் ஆப்பரிக்காவில் இருந்து முதல்முறையாக பரவத் தொடங்கியது. அங்கிருந்து அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் வேகமாக பரவியது. ஆனால், ஒமிக்ரானால் பெரிதாக பாதிப்பு இல்லை என்றே கருதி வந்த நிலையில், உலகளவில் கடந்த நவம்பர் மாதம் முதல் இதுவரை சுமார் 5 லட்சம் பேர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

 

130 மில்லியன்

இதுகுறித்து உலக சுகாதார மையத்தின் மேலாளர் அப்டி மஹமுட் கூறியதாவது:-

கொரோனாவின் மாறுபாடான ஒமிக்ரான் தொற்று அறிவிக்கப்பட்டது முதல், இதுவரை உலகளவில் 130 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 5 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கையில் அரை மில்லியன் இறப்புகள் பதிவாகியுள்ளது. இது மிகவும் அபாயகரமான விஷயம்.

கொரோனாவின் மேலாதிக்க மாறுபாடாக கருதப்பட்ட டெல்டா தொற்றையே ஒமிக்ரான் தொற்று முந்தியுள்ளது. ஒமிக்ரான் லேசான அறிகுறியை ஏற்படுத்துவதாக தோன்றினாலும், இது மிக வேகமாக பரவக்கூடியது. திறமையான தடுப்பூசிகள் செலுத்தும் யுகத்தில் 5 லட்சம் மக்கள் இறந்திருப்பது கவலையை அளிக்கிறது.

ஒமிக்ரானின் பாதிப்பு மற்றும் இறப்பு எண்ணிக்கை வியக்க வைத்தாலும், உண்மையான பாதிப்பு மற்றும் இறப்பு எண்ணிக்கை, இதைவிட அதிகமாக இருக்கும்.

ஒமிமைக்ரான் தொற்றை நாம் இன்னும் முழுமையாகக் கடக்கவில்லை. அதன் முடிவை நெருங்கி வருகிறோம் என்று நம்புகிறோம். பல நாடுகள் இன்னும் ஒமிக்ரானின் தொற்று உச்சத்தைக் கடக்கவில்லை. பல வாரங்களாகத் தொடர்ச்சியாக இறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் மிகவும் கவலையாக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க...

இனிமேல் வார சம்பளம்! ஊழியர்களுக்கு உச்சக்கட்ட மகிழ்ச்சி!!

அச்சதலான 10 அடி தோசை - சாப்பிட்டால் ரூ.71,000 பரிசு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)