தமிழ்நாட்டில் நாளை முதல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட மாட்டாது என உரிமையாளர்கள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு அமல் (Curfew enforcement)
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளும், இரவு நேர ஊரடங்கும் இன்று நள்ளிரவு முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.
ஆம்னி பேருந்துகள் (Omni Buses)
இரவில் பேருந்து போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அரசு விரைவுப் பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் ஆகியவற்றை இயக்கமுடியாத சூழல் உருவானது.
இந்நிலையில் பகல் பொழுதில் தொலைதூர ஊர்களுக்குப் பேருந்துகளை இயக்க தமிழ்நாடு போக்குவரத்துக் கழகமும், ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கமும் முடிவெடுத்திருந்தன. இதனால் இன்று காலை முதல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன.
செயற்குழு கூட்டம் (Executive Committee Meeting)
சென்னையிலிருந்து நாள் ஒன்றுக்கு 400 ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதனிடையே இன்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டம் கூட்டப்பட்டது.
அவசர ஆலோசனை (Emergency consultation)
அதில் ஆம்னி பேருந்துகளைப் பகலில் இயக்க முடியாது என்றும் கொரோனா பிரச்சினை முடிவுக்கு வரும்வரை ஆம்னி பேருந்துகளை இயக்கப் போவதில்லை என்று முடிவு எடுக்கப்பட்டது.
இயக்கப்பட மாட்டாது
இதனால் நாளை முதல் தமிழகத்தில் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படமாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டணம் திருப்பி செலுத்தப்படும் (Amount Refund)
ஏற்கெனவே முன்பதிவு செய்த பயணிகளுக்குக் கட்டணம் திருப்பி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் இந்த திடீர் அறிவிப்பு பொது மக்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க...
20 மாவட்டங்களில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் கொளுத்தப் போகிறது!
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாதம் ரூ.7,000? முழு விபரம் உள்ளே!