1. செய்திகள்

20 மாவட்டங்களில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் கொளுத்தப் போகிறது!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
40 degrees Celsius is going to burn in 20 districts!

தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர் உட்பட 20 மாவட்டங்களில் அதிகபட்சமாக 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

விதர்பா முதல் தமிழகம் வரை 1.5கிலோமீட்டர் உயரம் வரை நிலவும் வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக,

20.04.21 மற்றும் 21.04.21

மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் திருப்பூர்,சேலம் தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், ஈரோடு, மதுரை, திருச்சி, விருதுநகர், திருநெல்வேலி, மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும்.

கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, சேலம், நாமக்கல் மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் சூறைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவைக் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

வானிலை முன்னறிவிப்பு (Weather Forecast)

22.04.21

  • மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானமழை பெய்யக்கூடும்.

  • ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவைக் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

சென்னை (Chennai)

சென்னையைப் பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவுக்கு மேகமூட்டத்துடன் காணப்படும்.

வெப்பநிலை (Temperature)

அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸையும் ஒட்டியே இருக்கும்.

வெப்பநிலை முன்னறிவிப்பு (Temperature forecast)

20.04.21 முதல் 21.04.21 வரை

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்.

அதிகமாக வியர்க்கும் (Excessive sweating)

  • தமிழகம், புதுவையில் காற்றின் ஈரப்பதம் (Relative Humidity) 50 முதல் 80 விழுக்காடு வரை இருக்கக்கூடும் என்பதால், பிற்பகல் முதல் காலை வரை வெக்கையாகவும், இயல்புக்கு மாறாக அதிகமாக வியர்க்கும்.

  • தேவைக்கு ஏற்ப குடிநீர், இளநீர், மோர் மற்றும் நீர்ச்சத்து மிகுந்த காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகமாகச் சேர்த்துக்கொள்ளவும்.

ஆடைகள் (Dress)

வெள்ளை மற்றும் வெளிறிய வண்ணம் கொண்ட (Light colour)கதர் அடைகளை அணிவது சிறந்தது.

மழைபதிவு (Rainfall)

கடந்த 24 மணி நேரத்தில், கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை, புத்தன் அணைப்பகுதி ஆகியவற்றில், ல் தலா 7 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை (Warning to fishermen)

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டியக் கேரளக் கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் இப்பகுதிக்குச் செல்ல வேண்டாம் ன அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

பால் பண்ணை அமைக்க ரூ.1.75 லட்சம் மானியம்- மத்திய அரசின் மகத்தானத் திட்டம்!!

பால் பண்ணையில் கூடுதல் லாபம் பெற வேண்டுமா?

கன்று ஈன்ற மாடுகளைப் பராமரிக்கும் வழிமுறைகள்!

English Summary: 40 degrees Celsius is going to burn in 20 districts!

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.