மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 1 March, 2023 12:55 PM IST
On the occasion of his birthday, Chief Minister Stalin paid respects at anna memorial

தமிழ்நாட்டின் முதல்வரும், திமுகவின் தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது 70-வது பிறந்தநாளை இன்று கொண்டாடும் நிலையில் கலைஞர், பெரியாரின் நினைவிடத்திற்கு நேரில் சென்று மரியாதை செலுத்தினார்.

திமுகவின் தலைவரும், தமிழ்நாட்டின் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தனது 70 வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதனையொட்டி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், திரையுலக பிரபலங்களும், அரசு அதிகாரிகளும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். திமுக சார்பிலும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் இன்று காலை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞரின் நினைவிடத்திற்கு நேரில் சென்று தனது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். வேப்பேரி, பெரியார் திடலில் அமைந்துள்ள தந்தை பெரியார் அவர்களின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து வேப்பேரி, பெரியார் திடலில் அமைந்துள்ள தந்தை பெரியாரின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தி திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணியிடம் ஆசி பெற்றார். இந்த நிகழ்வுகளின் போது நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மற்ற தமிழக திமுக அமைச்சர்களான கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, எ.வ.வேலு, சக்கரபாணி, உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ், செஞ்சி மஸ்தான் ஆகியோரும், எம்.பிக்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா ஆகியோர்களும் உடன் இருந்தனர்.

பின்னர் மறைந்த கலைஞர் வாழ்ந்த கோபாலபுரம் இல்லத்திற்கு சென்று கலைஞரின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி அங்கிருந்து சி.ஐ.டி காலனி இல்லத்தில் வருகை தந்தார். அங்கே ராஜாத்தி அம்மாள் அவர்களிடம் ஆசி பெற்று கலைஞரின் திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வின் போது எம்.பி கனிமொழி கருணாநிதி உடன் இருந்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, இந்திய குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, ஆகியோரும் தங்களது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து உள்ளனர்.

இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு , முதல்வர் ஸ்டாலினுக்கு எழுதியுள்ள பிறந்தநாள் வாழ்த்துக் கடிதத்தில், ”தங்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதோடு, நல்ல ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் கிடைத்திடவும், மேலும் பல ஆண்டுகள் தொடர்ந்து நாட்டிற்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்றிடவும் வாழ்த்துகிறேன்என்று தெரிவித்துள்ளார்.

இந்திய குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் எழுதியுள்ள பிறந்தநாள் வாழ்த்துக் கடிதத்தில், ”எனது அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு, நாட்டிற்கு சேவையாற்றிட மகிழ்ச்சியான, ஆரோக்கியமான வாழ்க்கை கிடைத்திடவும் வாழ்த்துகிறேன்என்று தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, எழுதியுள்ள பிறந்தநாள் வாழ்த்துக் கடிதத்தில், ”70வது பிறந்தநாள் காணும் தாங்கள் நீண்ட ஆயுளுடனும், நிறைந்த ஆரோக்கியத்துடனும் வாழ பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்என்று தெரிவித்துள்ளார். அரசியல் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள், கட்சி பிரமுகர்கள் பலரும் முதல்வரை நேரில் சந்தித்தும் தங்களது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண்க:

ஸ்டாலின் சார் எதிரி யார் தெரியுமா? நடிகை ரோஜாவின் கேள்விக்கு கரவொலி எழுப்பிய தொண்டர்கள்

மார்ச் 20-ல் தமிழ்நாடு பட்ஜெட்- உரிமைத்தொகை உட்பட எதையெல்லாம் எதிர்ப்பார்க்கலாம்?

English Summary: On the occasion of his birthday, Chief Minister Stalin paid respects at Periyar's memorial
Published on: 01 March 2023, 11:47 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now