1. செய்திகள்

மார்ச் 20-ல் தமிழ்நாடு பட்ஜெட்- உரிமைத்தொகை உட்பட எதையெல்லாம் எதிர்ப்பார்க்கலாம்?

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan

தமிழக அரசின் நடப்பாண்டிற்கான நிதிநிலை அறிக்கை வருகிற மார்ச் மாதம் 20 ஆம் தேதி சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் அப்பாவு நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

திமுக தலைமையிலான கூட்டணி சட்டப்பேரவை தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பேற்ற நிலையில், தமிழக நிதி அமைச்சராக பழனிவேல் தியாகராஜன் பொறுப்பேற்றார்.

ஒவ்வொரு ஆண்டு தொடக்க காலாண்டில் தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வரும் நிலையில், நடப்பாண்டிற்கான (2023 – 24) நிதி நிலை பட்ஜெட்டை மார்ச் 20 ஆம் தேதி காலை 10 மணிக்கு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்வார் என தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும் அவர் குறிப்பிடுகையில், 2023- 24 ஆம் ஆண்டுக்கான முன்பண மானியக் கோரிக்கையும், 2022-23 ஆம் ஆண்டுக்கான கூடுதல் செலவீன மானிய கோரிக்கையையும் நிதித்துறை அமைச்சர் மார்ச் 28 ஆம் தேதி சட்டமன்றத்தில் தாக்கல் செய்வார் என்றார்.

சட்டமன்றத்தில் நிதிநிலை தொடர்பான அறிக்கை வாசிக்கப்பட்ட பிறகு, சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடைபெறும் எனவும் அந்தக் கூட்டத்தில் சட்டமன்றத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது பற்றி முடிவு செய்யப்படும் எனவும் தெரிவித்தார். மேலும், வேளாண் பட்ஜெட் தாக்கல் உள்பட அனைத்து அலுவல்களும் அலுவல் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என்றார்.

திமுக தனது தேர்தல் அறிக்கையில், மகளிருக்கு ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என அறிவித்திருந்தது. முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற முதல் நாளே அது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் ஏமாற்றமே மிஞ்சியது. இதனை மையமாக வைத்து எதிர்கட்சிகளும் திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என கடுமையாக குற்றம்சாட்டி வந்தனர்.

சமீபத்தில் நடைப்பெற்ற ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் பிரச்சாரத்தின் போதும் எதிர்க்கட்சியினர் உரிமை தொகை எப்போது வழங்குவீர்கள் என கேள்வி எழுப்பினார். இதனிடையே தான் முதல்வர் மு.க.ஸ்டாலினும் வரும் பட்ஜெட்டில் உரிமைத்தொகை வழங்குவது குறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்தார்.

முதல்வர் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டில் தமிழக மக்கள் நீண்ட நாள் எதிர்பார்த்து காத்திருக்கு குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்குவதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இது தவிர்த்து, சென்னையை தொடர்ந்து மதுரையில் மெட்ரோ ரயில் சேவையை அறிமுகப்படுத்த, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க 3 கோடி செலவில் டெண்டர் கோரியுள்ளது சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்.

இதனால் மெட்ரோ குறித்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம்பெறலாம் என அரசியல் வட்டாரங்கள் கருத்து தெரிவிக்கின்றனர். திமுகவின் மற்ற தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையிலும் ஏதேனும் புதிய அறிவிப்பு இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க:

காற்று நம்ம பக்கம் வீசுது சார்..காற்றாலை மின் உற்பத்தியில் தமிழகம் முதலிடம்

கையில் பரீட்சை அட்டையுடன் 12 ஆம் வகுப்பு தேர்வெழுத வந்த பாஜக முன்னாள் MLA

English Summary: Tamil Nadu budget will be presented on March 20 says appavu Published on: 28 February 2023, 12:26 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.