தங்கத்தின் விலை இந்தியாவில் ஒரு மாத காலமாக கடும் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வந்த நிலையில் தீபாவளி பண்டிக்கை நெருங்கும் வேளையில் தங்கத்தின் விலை குறையத் தொடங்கியது. தீபாவளிக்கு பின்னர் மீண்டும் விலையேறத் தொடங்கிய தங்கத்தின் விலை குறைந்தபாடில்லை.
தங்கத்தின் மீதான மோகம் இன்றளவும் பொது மக்களிடையே அதிகமாகவே உள்ளது. இதனிடையே இன்று சென்னை மற்றும் கோவையில் 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 வரை விலை அதிகரித்துள்ளது. அதன்படி சென்னையில் நேற்றைய 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.5,705 ஆக விற்ற நிலையில் இன்று ரூ.25 அதிகரித்து ரூ.5,730 ஆக விற்பனையாகிறது. சவரன் (8 கிராம்) ஒன்று ரூ.45,840 ஆகவும் விற்பனையாகிறது.
தென்னிந்தியாவில் அதிகளவிலான தங்க முதலீட்டில் உள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. தமிழ்நாட்டில் தங்கத்தின் வர்த்தகத்தை தீர்மானிக்கும் முக்கிய மாநகரமாக சென்னை திகழ்கிறது. கோவையிலும் இதை விலை நிலவரம் என்பது கூடுதல் தகவல்.
வெள்ளி விலை:
அமெரிக்க டாலரின் மதிப்பில் ஏற்படும் மாற்றங்கள் போன்ற பணவீக்கம், பணமதிப்பிழப்பு போக்குகளைப் பொறுத்து வெள்ளி விலையில் மாற்றம் காணப்படுவது வழக்கம். அமெரிக்க டாலரின் மதிப்பு குறையும் போது, வெள்ளியின் விலை அதிகரிக்கிறது. தங்கத்தின் விலை அதிகரித்துள்ள நிலையில், வெள்ளியின் விலை கிராமுக்கு 40 காசுகள் வரை அதிகரித்துள்ளது. அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.79.40 ஆகவும், கிலோ ஒன்றிற்கு ரூ.79,400 ஆகவும் விற்பனையாகிறது.
தங்கத்தின் ஹால்மார்க்கில் சந்தேகமா?
தங்க நகைகள் அதன் தூய்மையைக் குறிக்கும் அடையாளத்தைக் கொண்டிருக்க வேண்டும். தமிழகத்தில் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதைப்போல் தங்கத்தை எடைப்போடுவதற்கு பயன்படுத்தப்படும் எடைகள் மற்றும் அளவுகள் சட்ட அளவியல் துறையால் அங்கீகரிக்கப்பட வேண்டும். விலைப்பட்டியலில் தங்கத்தின் எடை தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும்.
தங்கத்தின் தூய்மை குறித்து உங்களுக்கு சந்தேகம் இருந்தால், நீங்கள் BIS-ஆல் அங்கீகரிக்கப்பட்ட மதிப்பீடு மற்றும் ஹால்மார்க்கிங் (A&H) மையத்திற்கும் செல்லலாம். சோதனைக்கு கட்டணம் வசூலிக்கப்படும். BIS அங்கீகரிக்கப்பட்ட மதிப்பீடு மற்றும் ஹால்மார்க்கிங் மையங்களின் பட்டியல் கீழே உள்ள இணையதளத்தில் இங்கு காணலாம்.
https://www.manakonline.in/MANAK/AHCListForWebsite
நடுத்தர மக்களின் பெரும்பாலான முதலீடு தங்கத்தை நோக்கித் தான் உள்ளது. அப்படியிருக்கும் பட்சத்தில் பணத்தை நீண்ட காலமாக சேமித்து, முதலீடு செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்களில் விழிப்பாக இருங்கள்.
pic courtesy: unsplash
மேலும் காண்க:
வல்வோடினியா- பிறப்புறுப்பு பகுதியில் தாங்க முடியாத வலிக்கு காரணம் இதுதானா?
இந்த வகை பயிர்ச்சிலந்திகள் எல்லாம் ஆபத்து- விவசாயிகளே கவனம்!