கன மழை காரணமாக தமிழகத்திற்கு வெங்காய வரத்து குறைந்துள்ளது. இதனால் வெங்காயத்தின் விலை கிடு கிடுவென உயர்ந்து தற்போது ரூ.100-யை எட்டியுள்ளது,
வெங்காயம் வரத்து குறைவு -Decreased supply of onions
தமிழகத்திற்கு ஆந்திரா, தெலுங்கானா,கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தான் அதிக அளவில் வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஆந்திரா, தெலுங்கானா,கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்து வரும் கன மழை காரணமாக வெங்காயம் சாகுபடி பாதிக்கப்பட்டது மேலும் வெளிமாநிலங்களில் இருந்து வரக்கூடிய வெங்காயத்தின் வரத்து குறைந்தது.
இதனால் கடந்த ஒரு வாரமாக வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
இந்தநிலையில் நேற்றைய நிலவரப்படி சில்லறை விற்பனையில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.70 முதல் ரூ.80 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், சின்ன வெங்காயம் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது இதனால் இல்லத்தரசிகள் கவலையில் உள்ளனர்.
விலை மேலும் உயரும் - Onion Prices will rise further
இந்த விலை உயர்வு வரும் டிசம்பர் மாதம் வரை நீடிக்கும் என்றும் பெரிய வெங்காயத்தின் விலை வரும் நாட்களில் கிலோ ரூ.120-ஐ எட்டும் என்றும் அடுத்த ஆண்டு ஜனவரியில் தான் விலை குறைய வாய்ப்புள்ளது என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
கோயம்பேட்டில் வரத்து குறைவு - Less Supply in Koymabedu market
கடந்த செப்டம்பா் மாதத்தில் 50 கிலோ கொண்ட ஒரு மூட்டை பெரிய வெங்காயம் ரூ.750 முதல் ரூ.1,100 வரை விற்பனையானது. இதன் காரணமாக அப்போது மொத்த விலையில் பெரிய வெங்காயம் ரூ.20 முதல் ரூ.30-க்கு விற்கப்பட்டது. ஆனால் தற்போது வெளி மாநிலங்களில் விளைச்சல் பாதிக்கப்பட்டதால் கோயம்பேடு சந்தைக்கு வரத்து வெகுவாக குறைந்து விட்டது. கடந்த ஞாயிறு, திங்கள் ஆகிய இரு தினங்களில் 700 முதல் 850 டன் அளவு வெங்காயம் மட்டுமே கொண்டுவரப்பட்டது. வெங்காயத்தின் வரத்து குறைந்ததால் மொத்தம் மற்றும் சில்லறை விற்பனையில் அதன் விலை அதிகரித்துள்ளது. வழக்கமாக தீபாவளி நேரத்தில் பெரிய வெங்காயத்தின் விலை அதிகரிக்கும். தற்போது 20 நாள்கள் முன்பாகவே அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க..
எல்லை பாதுகாப்பு படையில் வேலை! எஸ்.ஐ., ஏ.எஸ்.ஐ உள்ளிட்ட 228 காலிப் பணியிடங்கள் - முழுவிபரம் உள்ளே!
விவசாய தொழில் செய்கிறீகளா? நபார்டு வங்கியில் ரூ.20 லட்சம் கடனில் 36% - 44% மானியம் பெற்றிடுங்கள்...