தமிழக அரசின் வேளாண் கொள்கைகளில் மாற்றம் வர வேண்டும் என, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து, திருப்பூரில் அவர் கூறியதாவது: தமிழக வரலாற்றில், இரண்டாவது முறையாக, வேளாண்துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட்டில், 43 சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இருப்பினும், ஒன்று கூட, விளைபொருளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்யும் அறிவிப்பு இல்லை.
குறைந்தபட்ச ஆதார விலை (Minimum resource pricing)
கரும்புக்கு, 4 ஆயிரம், நெல்லுக்கு, 2,500 ரூபாய் வழங்கப்படவில்லை. நெல் விவசாயிகளுக்கு சேர வேண்டிய பணம் நிலுவை குறித்தும் அறிவிப்பு இல்லை. பழம், காய்கறி, கீரை உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில், உற்பத்தியை ஊக்குவிக்கும் திட்டம் தேவையில்லை.
அதற்கு பதிலாக, விளை பொருளுக்கு, குறைந்தபட்ச ஆதார விலை கிடைப்பது மட்டுமே, விவசாயிகள் பிரச்னைக்கு தீர்வாக அமையும். தமிழக அரசின் வேளாண் கொள்கையில் மாற்றம் வரவேண்டும். உற்பத்தி செலவுடன், 50 சதவீதம் சேர்த்து, குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய வேண்டும்.
அப்போது மட்டுமே, விவசாயிகள் வாழ்வாதாரம் மேம்படும். இல்லாத பட்சத்தில், எவ்வளவு ஆண்டுகள், வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்தாலும், விவசாயிகளுக்கு எவ்வித பயனும் இருக்காது.
மேலும் படிக்க
தமிழக வேளாண் பட்ஜெட் 2022: முக்கிய சிறப்பம்சங்கள்!
இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் திட்டம்: மாற்றுப் பயிர் சாகுபடி!