1. விவசாய தகவல்கள்

இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் திட்டம்: மாற்றுப் பயிர் சாகுபடி!

R. Balakrishnan
R. Balakrishnan

இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் திட்டம் படிப்படியாக செயல்படுத்தப்படும். மாற்றுப் பயிர் சாகுபடி வாயிலாக, விவசாயிகளின் வருமானத்தை பெருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, என வேளாண் துறை செயலர் சமயமூர்த்தி கூறினார். வேளாண் பட்ஜெட் தாக்கலுக்கு பின், அவர் அளித்த பேட்டியில், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், சிறு தானியங்கள், காய்கறிகள், பழ வகைகளை மாற்றுப் பயிராக சாகுபடி செய்யும் திட்டத்திற்கு, பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

ஊடுபயிர் (Intercropping) 

தென்னை, வாழை போன்ற பயிர்களுக்கு இடையில், ஊடுபயிராகவும்; வயல், வரப்புகளில் மாற்றுப் பயிராகவும் இவற்றை சாகுபடி செய்து, விவசாயிகள் வருமானத்தை பெருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மொபைல் போன் வாயிலாக, விவசாயிகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் 'டிஜிட்டல்' வேளாண்மை திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. 'தமிழ் மண் வளம்' என்ற இணையதள முகவரி உருவாக்கப்பட்டு, விவசாயிகளுக்கு மண்வள அட்டைகள் வழங்கப்பட்டு, வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.

பொருட்கள் உற்பத்திக்கு மட்டுமின்றி சந்தைப் படுத்துதலுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.சிறு தானியங்கள் உற்பத்தியை பெருக்குவதற்கு மண்டலங்கள் உருவாக்கப்படுகின்றன. துவரம் பருப்பு, சோயா உற்பத்தியை ஊக்குவிக்கும் திட்டங்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. பனை மேம்பாட்டு இயக்கம் வாயிலாக, முந்தைய பட்ஜெட்டில் பனை விதைகள் கொடுத்தோம்.

பனை பொருட்கள் (Palm Things)

இந்த பட்ஜெட்டில் பனை விதைகள் மட்டுமின்றி, பனை பொருட்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்யவும், இவற்றை சார்ந்துள்ள மக்கள் வருமானம் பெறவும் திட்டங்களை அறிவித்து உள்ளோம். ஒரே இரவில் இயற்கை விவசாயத்திற்கு மாறிய தால், சில நாடுகளில் உணவு தானிய தட்டுப்பாடு ஏற்பட்டதாக செய்திகள் உள்ளன. எனவே, இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் திட்டம் படிப்படியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதற்கேற்ப பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

பால்கனியில் மண்ணில்லா முறையில் செங்குத்து தோட்டம்!

நவீன பசுமைக்குடில்களில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம்!

English Summary: Natural Agriculture Promotion Program: Alternative Crop Cultivation! Published on: 20 March 2022, 12:51 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.