News

Friday, 24 March 2023 01:17 PM , by: R. Balakrishnan

Aadhar Pan Card Linking

இந்தியர்கள் அனைவருமே ஆதார் - பான் கார்டு இணைக்க வேண்டும் என மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. ஆதார் - பான் கார்டு இணைப்பதற்கான கடைசி தேதி வரும் மார்ச் 31ஆம் தேதி என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதார் - பான் இணைப்பு

ஆதார் - பான் கார்டு இணைப்பதற்கு 1000 ரூபாய் அபராதமும் வசூலிக்கப்படுகிறது. வரும் மார்ச் 31ஆம் தேதிக்குள் ஆதார் - பான் கார்டுகளை இணைக்காதவர்களின் பான் கார்டு செயலிழந்துவிடும் எனவும் மத்திய அரசு எச்சரித்துள்ளது. பான் கார்டு செயலிழந்து விட்டால் வங்கி சேவைகளையோ, முதலீடு உள்ளிட்ட நிதி சார்ந்த பரிவர்த்தனைகளையோ மேற்கொள்ள முடியாது. எனவே, மார்ச் 31ஆம் தேதிக்குள் தவறாமல் ஆதார் - பான் கார்டு இணைக்கும்படி மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பெரும்பாலான இந்திய குடிமக்கள் ஆதார் - பான் கார்டுகளை கட்டாயமாக இணைக்க வேண்டும். எனினும், சிலர் மட்டும் ஆதார் - பான் கார்டு கட்டாயமாக இணைக்க தேவையில்லை என மத்திய அரசு விலக்கு அளித்திருக்கிறது. அதன்படி, யாரெல்லாம் ஆதார் - பான் கார்டு இணைக்க தேவையில்லை என்பதை பார்க்கலாம்.

  1. அசாம், மேகாலயா, ஜம்மூ காஷ்மீர் ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள்.
  2. வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் (NRI).
  3. 80 வயதை தாண்டிய சீனியர் சிட்டிசன்கள்.
  4. இந்திய குடிமக்கள் அல்லாமல் இந்தியாவில் வசிக்கும் நபர்கள்

இவர்கள் அனைவரும் ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைக்க தேவையில்லை. மற்ற அனைத்து இந்திய குடிமக்களுமே கட்டாயமாக ஆதார் பான் கார்டு இணைக்க வேண்டும்.

மேலும் படிக்க

அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி: பென்சன் விதியில் அரசு செய்த முக்கிய மாற்றம்!

இரயிலில் இரவு பயணம் செய்ய புதிய விதிமுறைகள்: IRCTC அறிவிப்பு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)