1. செய்திகள்

இரயிலில் இரவு பயணம் செய்ய புதிய விதிமுறைகள்: IRCTC அறிவிப்பு!

R. Balakrishnan
R. Balakrishnan
IRCTC New Rules

பொதுமக்கள் பலரும் தொலைதூர பயணத்திற்கு இரயில் பயணத்தை தான் விரும்புகின்றனர். மேலும், இதில் கட்டணமும் குறைவாக இருப்பது இதன் சிறப்பம்சம் ஆகும். இரயில் பயணத்தின் போது தூக்கம் தொடர்பான பிரச்சனைகள் பெரும்பாலும் இரவு நேரத்தில் தான் ஏற்படுகின்றன. மேலும் பல பயணிகள் தூக்கம் தேவைப்படும் மற்ற நபர்களின் இருப்பை புரிந்து கொள்ள மறந்து விடுகின்றனர். அதனால் தான் ஐஆர்சிடிசி இரவுக்கான விதிகளை வகுத்துள்ளது.

IRCTC விதிகள் (New Rules)

இரவு 10 மணிக்குப் பிறகு, TTE (பயண டிக்கெட் பரிசோதகர்) பயணிகளின் டிக்கெட்டை ஆய்வு செய்ய முடியாது. ஸ்டேஷனில் பயணிகள் ஏறும் போது மட்டும் அவர்களது சீட்டுகளை சரிபார்க்கலாம். அதுவும் மற்ற பயணிகளை தொந்தரவு செய்யாத வண்ணம் இருக்கும். மேலும், கேட்டரிங் ஊழியர்கள் மற்றும் இதர ரயில்வே பணியாளர்களும் இந்த விதி பொருந்தும்.

பயணிகள் இயர்போன் இல்லாமல் சத்தமாக இசையைக் கேட்கவும் அனுமதிக்கப்படவில்லை. குழுவாகப் பயணம் செய்பவர்கள் இரவு 10 மணிக்குப் பிறகு சத்தமாக பேசாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று IRCTC விதிகள் கூறுகின்றன.

இரவு மெல்லிய வெளிச்ச நைட் லைட்டுகள் தவிர மற்ற அனைத்து விளக்குகளும் இரவு 10 மணிக்கு மேல் அணைக்கப்படும். கூடுதலாக, நடுத்தர பெர்த் பயணிகள் சிறிது நேரம் கழித்து தங்கள் பெர்த்துகளை விரித்தால் , கீழ் பெர்த் பயணிகள் புகார் செய்ய முடியாது.

IRCTC விதிகளின்படி இரவு 10 மணிக்கு மேல் ரயில்வே சார்பில் உணவு வழங்கக்கூடாது. இருப்பினும், இரயிலில் இரவு நேரத்திலும் இ-கேட்டரிங் சேவைகள் மூலம் உணவு அல்லது காலை உணவை முன்கூட்டியே ஆர்டர் செய்யலாம்.

இந்த விதிகளை மீறி யாராவது உங்களை தூங்க விடாமல் தொந்தரவு செய்தால் கம்பார்ட்மெண்ட்டில் உள்ள ரயில்வே ஊழியரிடம் தெரிவிக்கலாம். அல்லது அதிகாரபூர்வ வலைதளத்தில் புகார் அளிக்கலாம்.

மேலும் படிக்க

பழைய பென்சன் திட்டம்: மத்திய அரசின் பதில் இதுதான்!

15 நாட்களில் புதிய ரேஷன் அட்டை: கலெக்டர் அதிரடி உத்தரவு!

English Summary: New Rules for Night Train Travel: IRCTC Notice! Published on: 24 March 2023, 08:36 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.