அரசின் சேவைகள் அனைத்தையும் வழங்குவதற்கு என அரசின் பொது சேவை மையங்களை (CSC) தமிழ்நாடு மின் ஆளுமை முகமை (TNEGA) செயல்படுத்தி வருகின்றது. இச்சேவை மையங்களை தொடங்க விண்ணப்பங்கள் அரசின் சார்பாக வரவேற்கப்படுகிறது. இது குறித்த விரிவான தகவலை இப்பதிவில் பார்க்கலாம்.
தமிழ்நாடு மின் ஆளுமை முகமை (TNeGA) வேலையில்லாத கல்வியறிவு பெற்ற இளைஞர்கள், தொழில்முனைவோர், இ-சேவை மையங்கள் அல்லது பொதுவான சேவை மையங்களைத் தொடங்க விண்ணப்பங்களை வழங்குமாறு அரசின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு குறித்து ஆட்சியர் வி.பி. ஜெயசீலன் குறிப்பிடுகையில், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், கிராம அளவிலான தொழில்முனைவோர் உள்ளிட்ட பிற முகமைகள் மூலம் தங்களின் சுற்றுப்புறப் பகுதிகளில் இருந்து அரசின் சேவைகளை வழங்குவதற்காக பொது சேவை மையங்களை (CSC) தமிழ்நாடு மின் ஆளுமை முகமை (TNEGA) செயல்படுத்தி வருவதாகக் கூறியுள்ளார்.
இத்தகைய இ-சேவைகளை மேம்படுத்தும் நோக்கில், சிறந்த சேவைகளை வழங்குவதற்காக அனைத்துக் குடிமக்களும் புதிய பொது சேவை மையங்களைத் திறக்கவும், அதனை அனுமதிக்கவும் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை திட்டமிட்டுள்ளது என்றும் கூறியுள்ளார். அதோடு, பொது சேவை மையங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு வரிசையில் மக்கள் காத்திருக்கும் நேரத்தை குறைக்கும் என எதிர்ப்பார்ப்பதாகவும் கூறியுள்ளார்.
புதிய பொது சேவை மையங்களை தொடங்க ஆர்வமுள்ளவர்கள் http://www.tnesevai.tn.gov.in மற்றும் www.tnega.tn.gov.in ஆகிய இரு இணையதளங்களில் ஏப்ரல் 14 அன்று இரவு 8 மணி வரை விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மொபைல் போன் மற்றும் இ-மெயில் ஐடி ஆகியவை மூலம் விண்ணப்பதாரருக்குப் பயனாளர் அடையாளம் மற்றும் கடவுச்சொல் வழங்கப்படும் என்றும் ஆட்சியர் தெரிவித்திருக்கிறார். எனவே, தகுதியும், விருப்பமும் உள்ள இளைஞர்களும், தொழில் முனைவோர்களும் விண்ணப்பித்துப் பயன்பெறுங்கள்.
மேலும் படிக்க
50% மானியத்தில் விவசாய உபகரணங்கள்: விவசாயிகள் விண்ணப்பிக்க அழைப்பு!
விவசாயிகளே மகிழ்ச்சி செய்தி!! நுண்ணீர் பாசன திட்டத்திற்கு ரூ.450 கோடி!