பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 29 July, 2020 8:20 PM IST

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த பேருந்து போக்குவரத்தை ஆகஸ்ட் 1ம் தேதி முதல், சில தளர்வுகளுடன் துவக்குவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது.

மாநிலம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவியதையடுத்து,  கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் பேருந்து போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது.

பின்னர் சென்னையைத் தவிர பிற மாவட்டங்களில் நோய் தொற்று குறைந்தது. இதன் அடிப்படையில், பிற மாவட்டங்களில்  படிப்படியாக  ஜூன் மாதத்தில் மீண்டும் பொது போக்குவரத்து துவங்கியது. ஆனால் சென்னையைத் தொடர்ந்து மற்ற மாவட்டங்களிலும் கொரோனா தொற்று அதிகரித்ததால் பொது போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில், பல்வேறு தளர்வுகளுடன் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு, ஜூலை 31-ந்தேதியுடன் முடிவுக்கு வருகிறது. அதன்பிறகும் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதன்படி ஜூன் மாதத்தில் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டது போல் பிரித்து, கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர மற்ற பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

ஜூன்மாதம் பிரிக்கப்பட்ட மண்டலங்கள் விவரம் 

மண்டலம் 1 

கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கரூர், சேலம் மற்றும் நாமக்கல்

மண்டலம் 2 

தருமபுரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் கிருஷ்ணகிரி

மண்டலம் 3

விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி

மண்டலம் 4

நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி,அரியலூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை

மண்டலம் 5

திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை மற்றும் இராமநாதபுரம்

மண்டலம் 6

தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி

மண்டலம் 7 

காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு

மண்டலம் 8

சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதி

இதனிடையே, கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன், இன்று முக்கிய ஆலோசனை நடத்தினார். காணொலிக்காட்சி (Video Conference ) மூலம், நடைபெற்ற இந்த ஆலோசனையில் ஊரடங்கை நீட்டிக்கலாமா அல்லது மேலும் சில தளர்வுகளை அறிவிக்கலாமா என்பது குறித்துக் கேட்டறிந்தார்.

இதில், பேருந்து போக்குவரத்தை ஆகஸ்ட் 1ம் தேதி முதல் மீண்டும் துவக்குவது குறித்து என பரிசீலனை செய்யப்பட்டதாகத் தெரிகிறது

மேலும் படிக்க...

இந்திய எல்லையில் நுழையக் காத்திருக்கும் (வெட்டுக்கிளி) எதிரிகள் - மத்திய அரசு எச்சரிக்கை!

இன்று 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்!

English Summary: Opportunity to resume bus services in Tamil Nadu from Aug 1!
Published on: 29 July 2020, 10:53 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now