வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்பட 9 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலேர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியதில் இருந்து பரவலாக பெய்துவருகிறது. அனைத்து பகுதிகளிலும் பருவமழை இயல்பைவிட அதிகமாகவே பதிவாகி இருக்கிறது. இதன் தொடர்ச்சியாக கடந்த 2 நாட்களாக சென்னை உட்பட தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள் உள்பட சில இடங்களில் கனமழை பெய்துவருகிறது.
முடங்கியது போக்குவரத்து (Paralyzed traffic)
தொடரும் கனமழை காரணமாக, சென்னையில் பல பகுதிகள் தண்ணீரில் மிதக்கின்றன. தாழ்வானப் பகுதிகள் வெள்ளக்காடாக மாறிருப்பதால், பல இடங்களில் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.
குண்டும் குழியுமான சாலைகளில், வெள்ளம் தேங்கியுள்ளதால், வாகனஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். ஏற்கனவே மார்கழிப்பனி வாட்டி வதைத்துவரும் நிலையில், மழையும் சேர்ந்து கொண்டது. இதனால் மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
01.01.22
மிக கனமழை (Very heavy rain)
-
அதன்படி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் ஆகிய 9 மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.
-
அதாவது இந்த 9 மாவட்டங்களில் நிர்வாக ரீதியாக மிக கன மழைக்கான ஆரஞ்சு அலேர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் சில இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
02.01.22
கடலோர மாவட்டங்களில் அனேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
03.01.22
தென்தமிழகத்தில் சில இடங்களில் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை ( Chennai)
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணிநேரத்திற்கு பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் கன மழை முதல் மிக கன மழை பெய்யக்கூடும்.
வெப்பநிலை (Temperature)
அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸையும் ஒட்டி இருக்கும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை (Warning for fishermen)
01.01.22
குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
02.01.22 முதல் 04.01.22 வரை
-
குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
-
எனவே இப்பகுதிகளுக்கு செல்லும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...