News

Friday, 25 June 2021 05:19 PM , by: KJ Staff

மத்திய நீர்வள ஆணையர் ஹல்தார் தலைமையில்  காவிரி மேலாண்மை ஆணையத்தின் 12வது கூட்டம் காணொளி வாயிலாக இன்று நடைபெற்றது. உச்சநீதிமன்றம் பரிந்துரைத்த மாதாந்திர அட்டவணையின்படி, தமிழகத்திற்கு அதன் பங்கை வழங்க வேண்டும் என்று ஆணையத்திற்கு சி.டபிள்யூ.எம்.ஏ ( CWMA)ஆலோசனை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு நமது முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களால் கடிதம் மூலமாக  கேட்டுக்கொள்ளப்பட்டது.

ஜூன் மாதத்தில், மாநிலம் 9.19 ஆயிரம் மில்லியன் கன அடி (டிஎம்சி அடி) மற்றும் ஜூலை மாதத்தில் 31.24 டிஎம்சி அடி இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால்  ஜூன் 1 முதல் ஜூன் 13 வரை (வியாழக்கிழமை), சுமார் 1.5 டிஎம்சி அடி சுமார் 2.5 டிஎம்சி அடி பற்றாக்குறையுடன் இருந்தது அரசுக்கு தெரியவந்தது.

கூட்டத்தின் போது தமிழகம், புதுச்சேரி, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய நான்கு மாநிலங்களை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவது குறித்த பிரச்னை எழுப்பியது.

மேகதாதுவில் அணைக் கட்ட அனுமதி பெறப்படும் என கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்த உடன் தமிழக அரசு அதிகாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர், மேகதாது மட்டுமல்லாது எங்கு அணை கட்டினாலும் தமிழக அரசின் அனுமதி தேவை என்றும் அவசர தேவைக்காக திறந்துவிடும் தண்ணீரை தமிழகத்திற்கான நீராக ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்தனர்.

டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக அணை திறக்கப்பட்ட நிலையில் மாதந்தோறும் கர்நாடக அரசு  தர வேண்டிய தண்ணீரை தர வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்தனர். வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில் அணை கட்டுவது தொடர்பான எந்த ஆரம்பகட்ட பணியையும் மேற்கொள்ள கூடாது என்று தெரிவித்தனர்.

பிறகு, கூட்டத்தின் முடிவில் தமிழகத்திற்கு 33.19 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் ஜூன் மற்றும் ஜூலை மாதத்திற்கான தண்ணீரை திறக்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு ஆணையிட்டுள்ளது.

மேலும் படிக்க:

Kallanai Dam Open : குறுவை சாகுபடிக்காகக் கல்லணையிலிருந்து தண்ணீர் திறப்பு!

மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12ம் தேதி குறுவை சாகுபடிக்காகத் தண்ணீர் திறப்பு- முதலமைச்சர் உத்தரவு!

புதுப்பொலிவுடன் காட்சி தரும் மேட்டூர் அணை! நாளை தண்ணீர் திறப்பு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)