1.இயற்கை விவசாய விளைப்பொருட்களை வைத்தே இனி திருப்பதி லட்டு தயாரிக்கப்படும்
திருப்பதி ஏழுமலையான் திருத்தலத்தில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்பட்டு வருகிறது. தினசரி பக்தர்களுக்கு வழங்குவதற்காக சுமார் 4 லட்சம் லட்டுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. மேலும் ஒரு மாதத்தில் மட்டும் 1 கோடி லட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக தேவஸ்தான அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.
மேலும் பண்டிகை மற்றும் விசேஷ நாட்களில் பக்தர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு கூடுதலாகவும் லட்டுகள் தயாரிக்கப்பட்டு விற்பனையாகி வருகிறது.
இந்த நிலையில் நடைபெற்ற அறங்காவலர் குழு ஆலோசனை கூட்டத்தில் இந்த லட்டு பிரசாதத்தை இயற்கை விவசாயம் மூலம் கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தி தயாரிக்க தேவஸ்தான அறங்காவலர் குழு முடிவு செய்யப்பட்டுள்ளது.
2.இரட்டிப்பான மாம்பழ விலை
சேலம், கிருஷ்ணகிரி போன்ற பகுதிகளில் அதிகம் விளைச்சல் ஆகும் செந்தூரம், கிளி மூக்கு போன்ற ரக மாம்பழங்கள் கடந்த ஆண்டு விலை குறைந்து விற்பனை செய்யப்பட்டது. கடந்த ஆண்டு ஒரு கிலோ ரூ.35-க்கு விற்கப்பட்ட செந்தூரம் இந்த ஆண்டு ரூ.80 முதல் ரூ.110 வரை விற்கப்படுகிறது. இதேபோல் ரூ.30-க்கு விற்பனையான கிளி மூக்கு மாம்பழம் இந்த ஆண்டு ரூ.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் மாம்பழம் வரத்து குறைந்து இருப்பது தான்.
இதேபோல் பெங்களுரா, மல்கோவா, இமாம் சந்த், குண்டு நடுச்சாலை போன்ற ரக மாம்பழங்களும் விற்பனைக்கு வர தொடங்கியுள்ளன. இவற்றின் விலையும் கடந்த ஆண்டை விட 2 மடங்கு அதிகரித்துள்ளது.
கடும் வெயில் காரணமாக விளைச்சல் குறைந்து ஈரோட்டில் மாம்பழம் விலை உயர்ந்துள்ளது என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
3.சிகரத்தை தொட்டது மீன் விலை!
தமிழ்நாடு முழுவதும் உள்ள கடல் பகுதிகளில் மீன்களின் இனப்பெருக்கத்துக்காக ஆண்டுதோறும் மீன் பிடி தடைக்காலம் விதிக்கப்படுகிறது. அதற்கு பின், ஈரோட்டில் மீன் மார்க்கெட்டிற்கு வரும் கடல் மீன்களின் வரத்து நேற்று குறைந்தது. பொதுவாக 30 டன் மீன்கள் விற்பனைக்கு வரும் நிலையில் நேற்று வெறும் 9 டன் மீன்கள் மட்டுமே விற்பனைக்கு வந்தது. இதனால் மீன்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்த வாரம் ரூ.750-க்கு விற்பனையான ஒரு கிலோ வஞ்சரம் மீன், நேற்று மேலும் ரூ.250 விலை உயர்ந்து ரூ.1,000-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் அனைத்து மீன்களின் விலையும் ரூ.100 முதல் ரூ.250 வரை விலை உயர்ந்து விற்பனையானது.

4.பருப்பு வகைகளின் விலை உயர்வு!
விருதுநகர் மார்க்கெட்டில் பருப்பு வகைகளின் விலை உயர்ந்து காணப்படுகிறது. விருதுநகர் மார்க்கெட்டில் உளுந்து 100 கிலோ மூடைக்கு ரூ.300 விலை உயர்ந்து ரூ.8,200 ஆகவும், உருட்டு உளுந்தம் பருப்பு ரூ.900 விலை உயர்ந்து ரூ.12 ஆயிரம் ஆகவும், தொலி உளுந்தம் பருப்பு ரூ.9,600 ஆகவும் விற்பனை ஆனது. பாசிப்பருப்பு 100 கிலோ மூடைக்கு ரூ.200 விலை உயர்ந்து ரூ.10,500 ஆகவும், பாசிப்பயறு ரூ.7,400 முதல் ரூ.11,500 வரையிலும் விற்பனையானது.
5.பிளம்ஸ் பழ விளைச்சல் குறைவு
'மலைகளின் இளவரசி' கொடைக்கானல் என்றவுடன் நினைவுக்கு வருவது பிளம்ஸ் பழங்களாகும். இவை ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் விளைச்சல் அதிகரித்து மரங்களில் பிளம்ஸ் பழங்கள் காய்த்துக் குலுங்கும். சீசன் காலங்களில் இப்பழங்கள் விற்பனைக்கு வருவதால் சுற்றுலா பயணிகளும் கொடைக்கானல் பகுதியை சேர்ந்த பொதுமக்களும் இதனை ஆர்வத்துடன் வாங்கி சாப்பிட்டு வருகின்றனர். ஆனால் பருவநிலை மாற்றம் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக இதன் விளைச்சல் குறைந்து வந்தது. இந்தநிலையில் இந்த ஆண்டு இதுவரை பழங்கள் சரியாக காய்க்க தொடங்கவில்லை. இதனால் பழ விளைச்சலில் ஈடுபட்ட விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
6.காஞ்சிப்புரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்திக்கு ” பிரதமர் விருது”
ஒன்றிய அரசின் ஜன் ஜீவன் திட்டத்தை 100 சதவீதம் நிறைவேற்றி சாதனைப் புரிந்தமைக்காக காஞ்சிப்புரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்திக்கு ” பிரதமர் விருது” வழங்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நீர் மேலாண்மை, நீர் சேமிப்பு, மழை நீர் சேகரிப்பு மூலம் நிலத்தடி நீரை அதிகரித்தல் மற்றும் மறுபயன்பாடு போன்ற நடவடிக்கைகளைஜல் ஜீவன் திட்டத்தின் மைய நோக்கமாகும்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கிராமப்புற வீடுகளுக்கு ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ், 100 சதவீதம் குடிநீர் இணைப்பு வழங்கியதற்காக ஒன்றிய அரசின் 'பிரதமர் விருது' காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்திக்கு வழங்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வரும் 21 ஆம் தேதி டெல்லியில் நடைப்பெற உள்ள விழாவில், பிரதமர் மோடி இவ்விருதினை வழங்குவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், 'ஜல் ஜீவன்' திட்டம் துவங்கியபின், புதிதாக 1.16 லட்சம் குடிநீர் இணைப்புகள் கொடுக்கப்பட்டு மொத்தம் உள்ள 2.15 லட்சம் வீடுகளுக்கு முழுதுமாக குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
7.பஞ்சாப் நேஷனல் வங்கி உழவர் பயிற்சி மையம் பிள்ளையார்பட்டியில் ஏப்ரல் மாத இலவச பயிற்சி விவரம்
25.04.2023 டிரோன் மூலம் பூச்சி கொல்லி/ விரட்டி ( கெமிகல்/இயற்கை) தெளித்தல் செய்முறை விளக்க பயிற்சி.
27.04.2023 ஒருங்கிணைந்த முறையில் ஆடு வளர்ப்பு
29.04.2023 சுருள் பாசி வளர்ப்பு தொழில்நுட்ப மற்றும் சந்தைப்படுத்தல்.
24.04.2023 - 29.04.2023 கால் மிதியடி தயாரித்தல் பயிற்சி.
கீழே கொடுக்கப்பட்டுள்ளதொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும். 9488575716
மேலும் படிக்க
இயற்கை விவசாயத்திற்கு மவுசு: திருப்பதி லட்டு இனி இப்படித் தான் தயாரிக்கப்படும்!