நவரை போகத்திற்கு தேவையான நெல் ரகங்களை மானிய விலையில் பெற்றுக் கொள்ளலாம் என புதுச்சேரி வேளாண்துறை அறிவித்துள்ளது. அடுத்த மாதம் 15ம் தேதிக்குள் மானிய படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
புதுச்சேரி மாநிலம், தட்டஞ்சாவடி கூடுதல் வேளாண் இயக்குனர் வசந்தகுமார் விடுத்துள்ள செய்திக் குறிப்ப்பில், வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறையின் தட்டாஞ்சாவடி கூடுதல் வேளாண் இயக்குனர் அலுவலகம் மூலமாக ஒருங்கிணைந்த சான்று விதை உற்பத்தி திட்டத்தில் நவரை பருவத்திற்கு தேவையான நெல் ரக சான்று விதைகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
நவரை போகத்திற்கு ஏ.டி.டி.,-37, ஏ.எஸ்.டி.,-16, கோ ஆர்-51 நெல் ரகங்களை மானிய விலையில் பாப்ஸ்கோ மூலம் விவசாயிகள் பெற்றுக் கொள்ளலாம்.உழவர் உதவியகங்களை விவசாயிகள் அணுகி, சாகுபடி செய்ய உள்ள நில அளவிற்கு பரிந்துரைக்கும் நவரை நெல் விதைகளை மானிய விலைக்கான சான்று பெற்று, பாப்ஸ்கோ விற்பனை மையங்களில் பெற வேண்டும்.
நெல் விதைகள் வாங்கிய விற்பனை ரசீதை நவரை நெல் உற்பத்தி ஊக்கத் தொகை கோரும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து மார்ச் 15ம் தேதிக்குள் உழவர் உதவியக அலு வலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
வேளாண் சீர்திருத்தங்களுக்காக பிரதமர் மோடிக்கு பாராட்டு தீர்மானம் நிறைவேற்றம்!
90% மானியத்தில் வெள்ளாடு, செம்மறி ஆடு பெற விண்ணப்பிக்கலாம் - விவரம் உள்ளே!!
தமிழக சட்டப்பேரவையில் நாளை இடைக்கால பட்ஜெட் - ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்!!
அழகிய ரோஜா மலரின் அற்புத மருத்துவ குணங்கள்
சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் கசப்புத் தன்மையில்லாத பழுபாகற்காய்!