ஈரோடு மாவட்டத்தில், கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நாட்டு சர்க்கரை (Palm Jaggery) ஏலமும், சத்தியமங்கலத்தில் உள்ள கரட்டூர் பூ மார்க்கெட்டில் பூக்கள் ஏலமும் நடைபெற்றது. நாட்டு சர்க்கரை ஏலம், விற்பனைக் கூட கண்காணிப்பாளர் சீனிவாசன் முன்னிலையில் நடைபெற்றது. இந்த ஏலத்துக்கு கவுந்தப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் நாட்டு சர்க்கரையை 1,698 மூட்டைகளில் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.
நாட்டு சர்க்கரை ஏலம்:
ஏலத்தில் 60 கிலோ மூட்டை நாட்டு சர்க்கரை, குறைந்தபட்ச விலையாக (Minimum price) ரூ.2 ஆயிரத்து 220-க்கும், அதிபட்ச விலையாக (Maximum price) ரூ.2 ஆயிரத்து 280-க்கும் விற்பனை ஆனது. விற்பனைக்கு வந்த அனைத்து நாட்டு சர்க்கரை மூட்டைகளும், மொத்தம் ரூ.37 லட்சத்து 97 ஆயிரத்து 355-க்கு ஏலம் போனது.
பூக்கள் ஏலம்:
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் உள்ள கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். அதன்படி நேற்று வழக்கம்போல் பூ மார்க்கெட் நடைபெற்றது. நேற்று நடந்த மார்க்கெட்டுக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் 4½ டன் பூக்களை (Flowers) விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இந்த ஏலத்தில் மல்லிகைப்பூ (Jasmine) கிலோ ஒன்று ரூ.301-க்கும், முல்லை ரூ.320-க்கும், காக்கடா ரூ.140-க்கும், செண்டுமல்லி ரூ.20-க்கும், பட்டுப்பூ ரூ.61-க்கும், ஜாதிமல்லி ரூ.500-க்கும், கனகாம்பரம் ரூ.325-க்கும், சம்பங்கி ரூ.80-க்கும், அரளி ரூ.100-க்கும், துளசி ரூ.40-க்கும், செவ்வந்தி ரூ.140-க்கும் ஏலம் போனது.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
காலையில் முருங்கை இலை சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா? தெரிந்து கொள்ளுங்கள்!
வேளாண்மை சார்ந்த தொழில்கள் பற்றி அறிவோம்!