1. வாழ்வும் நலமும்

காலையில் முருங்கை இலை சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா? தெரிந்து கொள்ளுங்கள்!

KJ Staff
KJ Staff
Drumstick
Credit : Tamil Indian Express

மனித உடலில் ஏற்படும் பல வகை நோய்களுக்கு முருங்கை இலை (Drumstick leaf) அதிக பயன் தருகிறது. முருங்கை செடியின் இலை, இது இந்தியாவில் ஏராளமாக வளர்க்கப்படுகிறது. இந்த இலை பொடியாக்கி ஆன்லைன் மற்றும் மளிகை கடைகளில் எளிதாக விற்கப்படுகிறது. கடைகளில் ரெடிமேடாக விற்கப்படும் பொடியில் உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால், முருங்கை இலை பொடியை நீங்களே எளிமையாக வீட்டிலேயே செய்யலாம். நீங்கள் செய்ய வேண்டியது சில புதிய முருங்கை இலைகளை சூரியஒளியில் (Sun light) உலர்த்தி அவற்றை ஒரு பொடியாக அரைக்கவும். இதனை தினமும் காலையில், ஒரு பாத்திரத்தில் சிறிது தூள் எடுத்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி சில நிமிடங்கள் வேகவைத்து முருங்கை இலை டீயை குடிக்கலாம்.

முருங்கை இலையின் பயன்கள்:

பண்டைய காலங்களில், முருங்கை இலை பொடி தோல் நோய்கள் (Skin disease) மற்றும் தொற்றுநோய்களுக்கு சிகிச்சையளிக்கவும் நோய் தாக்குதலை கட்டுப்படுத்தவும், பயன்படுத்தப்பட்டது, இந்த இலையில், பூஞ்சை காளான், வைரஸ் தடுப்பு, ஆண்டிரஸன் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளது. இதனால் இது ஒரு பிரபலமான சூப்பர்ஃபுட் (Super food) என்று பட்டம் பெற்றது.

மேலும் இந்த பொடியை தேயிலை அல்லது காபியில் உட்கொள்வதன் மூலமும், உணவுகளில் சேர்த்துக்கொள்வதன் மூலமும் நீரிழிவு நோயாளிகளுக்கு (Diabetes) எடை குறைப்பு, மற்றும் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க இது பயன்படுகிறது.

  • சிந்தியா ட்ரெய்னர் எழுதிய கொழுப்பை எப்படி குறைப்பது என்ற புத்தகத்தில், முருங்கை இலை தேநீர் (Drumstick tea) எடை குறைப்புக்கு முக்கிய பயன் தருகிறது. ஏனெனில் அதில் உள்ள நுகர்வு கொழுப்பு சேமிப்புக்கு பதிலாக ஆற்றல் உற்பத்திக்கு வழிவகுக்கிறது.
  • இலைகள் குறைந்த கொழுப்பு மற்றும் ஊட்டச்சத்து அடர்த்தியானவை மற்றும் அதிக கலோரி கொண்ட உணவுகளுக்கு மாற்றாக இதனை உண்ணலாம்.
  • முருங்கை இலைச் சாற்றில் ஐசோதியோசயனேட் மற்றும் நியாசிமினின் ஆகியவை உள்ளன, அவை இரத்த அழுத்தம் உயரத்தும் தமனிகள் தடிமனாக இருப்பதைத் தடுக்க உதவுகின்றன,.
  • மேலும் இதில் ஆக்ஸிஜனேற்ற குளோரோஜெனிக் அமிலம் உள்ளது, இது இரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும் என்று கூறப்படுகிறது.
  • இதில் வைட்டமின் சி (Vitamin C) உள்ளது, இது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதற்கு காரணமாகும்.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

சர்க்கரை நோயாளிகளுக்கு அட்டகாசமான டையட் லோ கிளைசெமிக்!

இயற்கையான கல் உப்பை பயன்படுத்துவோம்! உடல்நலம் காப்போம்!

English Summary: Are there so many benefits to eating drumstick leaves in the morning? Published on: 25 March 2021, 06:22 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.