News

Tuesday, 19 April 2022 10:52 AM , by: Elavarse Sivakumar

தமிழகத்தில் இறந்தவர்கள் பெயரில் பல்லாயிரக்கணக்கானோருக்கு ஓய்வூதியம் செலுத்தப்பட்டு வருவதாக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மாநில வங்கியாளர்கள் குழு கூட்டம் அண்மையில் சென்னையில் நடைபெற்றது. இதில் தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்று உரையாற்றினார். தனது உரையின் சாராம்சத்தை நிதியமைச்சர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பகிர்ந்துள்ளது:-

இணக்கம்

பல்வேறு அரசு திட்டங்கள் மற்றும் மானியங்களைத் தகுதியுள்ள பயனாளிகளுக்குக் கொண்டு சேர்க்கும் நோக்கத்திற்காக, வங்கிகளுடன் இணக்கமாக செயல்படவே அரசு விரும்புகிறது. எங்கள் முன்னெடுப்புகள் வங்கி செயல்பாடுகளை மேலும் அதிகரிக்கும் எனவும், வங்கி வைப்பு நிதியினை உயர்த்தும் எனவும் நம்புகிறேன். அடுத்த இரண்டு ஆண்டுகளில் மகளிர் சுய உதவிக் குழுக்கள், சிறு குறு தொழில் நிறுவனங்கள் உள்ளிட்டோருக்கு மானியங்களை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்த இருக்கிறோம். எனவே வங்கி செயல்பாடுகள் அதிகரிக்கும்.

வேதனை

அதேநேரத்தில், அரசின் நலத்திட்டங்களின் பலன்கள் தகுதியான பயனாளிகளுக்கு சென்று சேருவதில்லை என்பது வேதனைதான். எனவே நிர்வாகத்தை மேம்படுத்த புதிய வழிகளை கண்டறிய வேண்டும். நகைக் கடன் திட்டத்தில் ஆயிரக்கணக்கான முறைகேடுகள் நடந்துள்ளன.

தகுதியான பயனாளிகளாக இருந்தும் சிலரது தவறுகளால் ஏழை மக்களுக்கு பலன் கிடைக்காமல் இருப்பது மிகப்பெரிய தோல்வி. அவ்வாறு, குடிமை பதிவேட்டில் இறந்துவிட்டதாக பதவாகியுள்ள பல்லாயிரக்கணக்கானோருக்கு இன்னும் ஓய்வூதியம் செலுத்தப்படுகிறது. இவ்வாறு தாம் பேசியதாக,டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க...

முட்டைக்குள்ளும் Diet இருக்கு- தெரியுமா உங்களுக்கு!

நோயாளி வயிற்றுக்குள் சிக்கிய கத்திரி- அறுவை சிகிச்சையில் நடந்த அலப்பறை!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)