பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 25 January, 2021 2:04 PM IST
Credit : India Today

அதிகரித்து வரும் வெங்காய ஏற்றுமதியால் சந்தையில் வெங்காய விலை மீண்டும் உயரத்தொடங்கியுள்ளது. 

மஹாராஷ்டிரா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில், பெரிய வெங்காயம் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு, உற்பத்தியை பொறுத்து, நாடு முழுதும் வெங்காய விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

வெளிநாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி

எதிர்பாரதவிதத்தில் கடந்தாண்டு பெய்த மழையால், உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு, வெங்காய விலை கிலோ 120 ரூபாய் வரை உயர்ந்தது. இதனால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். வெங்காய விலையை கட்டுப்படுத்தும் வகையில், அதன் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது. வெங்காய இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து, ஆப்கானிஸ்தான், துருக்கி உள்ளிட்ட நாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டு கிலோ 100 ரூபாய் வரை விற்கப்பட்டது.

மீண்டும் உயரும் வெங்காய விலை

கூட்டுறவு மற்றும் தோட்டக்கலைத் துறை வாயிலாக மானிய விலையில் சென்னையில் 50 ரூபாய்க்கு வெங்காய விற்பனை நடந்தது. இந்நிலையில், வெங்காய அறுவடை, 2020 நவ., முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. இதனால் டிசம்பரில் 1 கிலோ பெரிய வெங்காயம் 25 முதல் 30 ரூபாய்க்கு விற்கப்பட்டது. கிடங்குகளில் இருந்து மீண்டும் அரபு நாடுகளுக்கும் சிங்கப்பூர். மலேஷியாவிற்கும் வெங்காய ஏற்றுமதி துவங்கி உள்ளது. இதன் காரணமாக, வெங்காய விலை மீண்டும் அதிகரித்து வருகிறது.

 

மேலும் அதிகரிக்கும் அபாயம்

தற்போது, சென்னை உட்பட தமிழகம் முழுதும், 1 கிலோ வெங்காயம், 40 முதல், 50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்த விலை இன்னும் உயரக்கூடும் என்கின்றனர் வியாபாரிகள். மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு விதித்த தடையை நீக்காத நிலையில், எப்படி ஏற்றுமதி செய்யப்படுகிறது என பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். வெங்காய விலையை கட்டுப்படுத்த மத்திய - மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

மேலும் படிக்க...

விவசாயிகளுக்கு அடிக்கப்போகிறது ஜாக்பாட்-ரூ.1 லட்சம் கோடி மானியம்!

பண்ணைக் குட்டைகள் அமைக்க ரூ.75,000 மானியம்!

தமிழக கால்நடைத்துறை திட்டங்களுக்கு ரூ.1,464 கோடி நிதி வேண்டும் - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கோரிக்கை!!

வண்ண வண்ண மலர்கள் விற்பனையில் அதிக லாபம் தரும் - பட்டன் ரோஸ் சாகுபடி!

இயற்கை விவசாயம் செய்ய 100 பேருக்கு ரூ.60 லட்சம் மானியம்!

English Summary: People worried on Onion prices rise again due to increase in exports
Published on: 25 January 2021, 02:00 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now