1. செய்திகள்

தமிழக கால்நடைத்துறை திட்டங்களுக்கு ரூ.1,464 கோடி நிதி வேண்டும் - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கோரிக்கை!!

Daisy Rose Mary
Daisy Rose Mary

தமிழக கால்நடைத் துறையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த ரூ.1,464 வழங்க வேண்டும் என்று சென்னை வந்த மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்கிடம், தமிழக கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலைராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மத்திய-மாநில அமைச்சர்கள் சந்திப்பு

சென்னை வந்துள்ள மத்திய கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் கிரிராஜ் சிங்கை, தமிழக கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் நேற்று சந்தித்து பேசினார். அப்போது, கால்நடைத்துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய பல்வேறு திட்டங்களை செயல்படுத்த தேவையான நிதி கோரும் மனுவை வழங்கினார்.

இதுகுறித்து கால்நடை பராமரிப்புத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறை மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்.

அதி நவீன கால்நடை பண்ணை அமைக்க கோரிக்கை

 • தமிழகத்தில் கோழியினங்களின் ஏற்றுமதியை அதிகரிக்கும் விதமாக புதிய 3 பிளஸ்தரம் கொண்ட உயிரியல் பாதுகாப்புஆய்வகத்தை தமிழகத்தில் நிறுவ ரூ.103 கோடியே 45 லட்சம்

 • கால்நடைகள் ஆரோக்கியம் மற்றும் இனப்பெருக்க திறனை மேம்படுத்த ரூ.69 கோடியே 92 லட்சத்தில் தாதுஉப்புக் கலவை உற்பத்தி ஆலை

 • உறைவிந்து உற்பத்தி ஆலை அமைக்க ரூ.87 கோடியே 33 லட்சம்

 • நவீனமயமாக்கப்பட்ட நாட்டுக்கோழி இனப்பெருக்க பண்ணை அமைக்க ரூ.102 கோடியே 76 லட்சம்

 • கோமாரி நோய் தடுப்பூசி ஆய்வகத்தை ராணிப்பேட்டையில் நிறுவ ரூ.146 கோடியே 19 லட்சம்

 • ராஷ்டிரிய கோகுல் மிஷன் திட்டத்தின்கீழ் ரூ.64 கோடியே 54 லட்சம்

 

நவீன மருத்துவம் & கிடங்குகளை அமைக்க கோரிக்கை

 • புதிய கால்நடை நிலையங்கள் கட்டவும், உள்கட்டமைப்பு வசதி களை மேம்படுத்தவும் ரூ.311 கோடியே 31 லட்சம்

 • கால்நடை நோய் கண்டறிதல் வசதிகளை மேம்படுத்த ரூ.22 கோடியே 94 லட்சம்

 • மருந்து சேமிப்பு கிடங்குகள் நிறுவ ரூ.63 கோடியே 65 லட்சம்

 • கால்நடை மற்றும் விலங்கின அறிவியலுக்கான ஒருங்கிணைந்த உயர் ஆராய்ச்சி நிலையத்துக்கு ரூ.185 கோடியே 71 லட்சம்

 • நடமாடும் கால்நடை மருத்துவ சேவையை வழங்க ரூ.90 கோடியே9 லட்சம்

உள்நாட்டு நாய் இனங்களை பாதுகாக்க கோரிக்கை

இதுதுவிர, தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம் வாயிலாக உள்நாட்டு நாய் இனங்களை பாதுகாக்க, தீவனத்தை சிறந்த முறையில் உபயோகிக்க, உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.209 கோடியே 64 லட்சம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். இவை அனைத்தையும் செயல்படுத்த மொத்தம் ரூ.1,463 கோடியே 86 லட்சம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார் இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட் டுள்ளது.

மேலும் படிக்க...

வண்ண வண்ண மலர்கள் விற்பனையில் அதிக லாபம் தரும் - பட்டன் ரோஸ் சாகுபடி!

இயற்கை விவசாயம் செய்ய 100 பேருக்கு ரூ.60 லட்சம் மானியம்!

நெல்லின் ஈரப்பதத்தை குறைக்க வந்துவிட்டது நவீன இயந்திரம்! தஞ்சையில் செயல்முறை விளக்கத்துடன் பரிசோதனை!

தேயிலையில் கொப்பள நோய் தாக்குதல்- தடுக்க எளிய வழிகள்!

English Summary: Tamil Nadu needs Rs 1,464 crore for livestock projects says Minister Udumalai Radhakrishnan

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.