இந்தியாவின் பணக்கார விவசாயி: RFOI விருதினை வென்ற குஜராத் பெண்! விவசாயத்தில் மட்டும் 50 கோடி.. RFOI விருதினை வென்ற யுவராஜின் வெற்றிக் கதை! நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 19 May, 2022 3:27 PM IST
Perarivalan 's release gives hope: Nalini's mother

நளினியின் தாயார் பத்மாவதி, தற்போது தனது மகளும் விடுதலையாகி விடுவார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். தனது மகனின் விடுதலைக்காக பேரறிவாளனின் தாய் அற்புதம் அம்மாளின் அயராத போராட்டத்தை பாராட்டிப் பேசிய அவர், பேரறிவாளனின் தாயின் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி இது எனவும் கூறியுள்ளார்.

நளினி ஸ்ரீஹரனின் 82 வயதான தாயார் பத்மாவதி பேசுகையில், சிறையில் இருந்து தனது மகள் விடுவிக்கப்படுவதைப் பார்க்க விருப்பம் தெரிவித்தார். பத்மா, தற்போது பரோலில் வெளிவந்துள்ள தனது மகள் நளினியுடன் வேலூரில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

31 ஆண்டுகளுக்குப் பிறகு, ராஜீவ் காந்தி கொலைவழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளில் ஒருவரான ஏஜி பேரறிவாளனை விடுதலை செய்து மே 18 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பு, வழக்கில் உள்ள மற்ற குற்றவாளிகளின் குடும்ப உறுப்பினர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. “அறிவு (பேரறிவாளன்) சிறையில் இருந்தபோது, ​​அவர் பிறந்தநாளன்று என்னிடம் வந்து என்னை சந்தித்து ஆசி பெறுவார். அவருக்கு கேக் ஊட்டி ஆசிர்வாதம் செய்தது எனக்கு மகிழ்ச்சியான தருணம்” என்கிறார் பத்மாவதி. தன் மகள் நளினி மற்றும் மருமகன் ஸ்ரீஹரன் ஆகியோரின் விடுதலையைக் குறித்தும் இவர் பேசியுள்ளார்.

மேலும் அவர் பேசுகையில், நீதிபதிகள் எல் நாகேஸ்வரராவ், பி.ஆர்.கவை, ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, பேரறிவாளனின் கருணை மனு மீதான உத்தரவை நிறைவேற்றும் போது, ​​அவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்து மே 18ஆம் தேதி தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்புக்குப் பிறகு, எனது மகளும் விரைவில் விடுதலை செய்யப்படுவார் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த தருணத்தை விவரிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை.

செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் எங்களுக்கு உறுதுணையாக நின்ற அனைத்து தலைவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எங்களை விடுவிக்கக் கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட நான்கு வழக்கறிஞர்கள் மற்றும் செங்கொடி (பேரறிவாளன் மற்றும் பலருக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை எதிர்த்து தன்னைத்தானே தீக்குளித்துக்கொண்ட காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 20 வயது பெண்) தனது உயிரைத் தியாகம் செய்தார்கள். அவர்களை எங்களால் மறக்க முடியாது” என்றும் தெரிவித்தார்.

“எனது மகள் நளினியும் மற்றவர்களும் சிறையில் இருந்து வெளியே வருவார்கள் என்று நான் 100 சதவீதம் நம்புகிறேன். இந்தத் தீர்ப்பு எங்களுக்கு நம்பிக்கையை அளித்துள்ளது. எங்கள் குழந்தைகளின் விடுதலைக்காக அற்புதம் அம்மாளின் (பேரறிவாளனின் தாய்) பங்களிப்பு பாராட்டுக்குரியது. அவரைப் போன்ற ஒருவரை யாராலும் கண்டுபிடிக்க முடியாது. அவர் ஒரு அபூர்வ மனிதர். அவரது முயற்சிகள் பாராட்டுக்குரியது” என்று கூறினார். மேலும், இந்த வழக்கில் தண்டனை பெற்ற மேலும் 6 பேரின் விடுதலையை உறுதி செய்ய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையையும், இந்த தீர்ப்புக்கு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் பத்மாவதி நன்றி தெரிவித்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்தத் தீர்ப்பை ‘வரலாற்றுத் தீர்ப்பு’ என்றும், அற்புதம் அம்மாளின் தொடர் முயற்சி என்றும் பாராட்டினார். மற்ற குற்றவாளிகளின் விடுதலை குறித்து கேட்டபோது, ​​"தீர்ப்பு நகல் இன்னும் வரவில்லை. தீர்ப்பின் முழு விவரம் கிடைத்ததும் சட்ட வல்லுனர்களுடன் ஆலோசிப்போம். பின்னர், தமிழக அரசு கோருவது குறித்து முடிவெடுக்கும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார், வழக்கில் உள்ள பிறரும் விடுவிக்கப்படலாம் என்ற நம்பிக்கையைத் தருகிறது.

முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகிய மூவருக்கும் 1991 மே மாதம் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையில் தொடர்புடையதாக நளினிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. மூவரின் தூக்கு தண்டனையை 2014-ல் உச்ச நீதிமன்றம் ஆயுள் தண்டனையாகக் குறைத்தது. 2021 மே மாதம் ஆட்சிக்கு வந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

திருப்பூரில் வட்டெழுத்து கல்பலகை கண்டெடுப்பு

டிராக்டர் லோன் எங்கு பெறுவது? எப்படி பெறுவது?

English Summary: Perarivalan 's release gives hope: Nalini's mother
Published on: 19 May 2022, 03:27 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now