தமிழகத்தில் ஊரடங்கு ஜூலை 5ம் தேதி காலையுடன் நிறைவடைய உள்ள நிலையில், ஊரடங்கு ஜூலை 12 ஆம் தேதி காலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்று ஜூலை 5ஆம் தேதி முதல் அனைத்து மாவட்டங்களிலும் ஒரே மாதிரியான தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர அனைத்து பகுதிகளிலும் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட தளர்வுகள் கூடிய செயல்பாடுகள் தொடர்ந்து அனுமதிக்கப்படும். இரவு 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள கடைகள் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
அரசு மற்றும் தனியார் கண்காட்சி நிகழ்வுகள் நடத்த அனுமதிக்கப்படும். சரியான அழைப்பிதழ் வைத்திருப்பவர்கள் மட்டும் இதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இந்த அரங்குகளில் கண்காட்சி விற்பனைக் கூடங்களின் உரிமையாளர்கள், பணியாளர்கள் ஆர்டிபிசிஆர் பரிசோதனை அல்லது இரண்டு தவணைகள் தடுப்பூசி போட்டுக்கொண்டிருக்க வேண்டும் என்பது அவசியம்.
உணவகங்கள், விடுதிகள், தங்கும் விடுதிகள் மற்றும் உறைவிடங்களில் உள்ள ஹோட்டல்களில் காலை 6 மணி முதல் மாலை 8 மணி வரை காற்றோட்ட வசதியுடன், நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, 50 சதவீத நுகர்வோர் மட்டும் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்பட்டுள்ளது.
தேநீர் கடைகளில் ஒரு நேரத்தில் 50 சதவீத பேர் மட்டும் தேநீர் அருந்த அனுமதிக்கப்படுவர்.
கேளிக்கை விடுதிகளில் ஜிம், விளையாட்டுக்கள் மற்றும் உணவகங்கள் மட்டும் அனுமதிக்கப்படும்.
தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழிநுட்ப சேவை நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் பணியாற்ற அனுமதிக்கப்படும்.
தங்கும் விடுதிகள், விருந்தினர் இல்லங்கள் செய்லபட அனுமதிக்கப்படும். அங்குள்ள உணவு விடுதிகள் மற்றும் தங்குமிடங்களில் 50 சதவீத நுகர்வோர் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்.
அனைத்து மாவட்டத்திலும் பொது பேருந்து போக்குவரத்திற்கு அனுமதி விதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்திற்குள்ளேயும், மாவட்டங்களுக்கு இடையேயும் குளிர்சாதன வசதி இல்லாமல் 50 சதவீத இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க வேண்டும்.
மது கடைகள் காலை 10 மணி முதல் மாலை 8 மணி வரை செயல்பட அனுமதி உள்ளது.
அனைத்து வழிபாட்டு தலங்கள் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்படலாம். திருவிழாக்கள் மற்றும் குடமுழுக்கு நடத்த அனுமதிக்கவில்லை.
அனைத்து துணிக்கடைகள் மற்றும் நகைக்கடைகள் சரியான காற்றோட்ட வசதியுடன், ஒரு நேரத்தில் குறைந்த வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதியுண்டு.
மேலும் படிக்க:
தமிழகத்தில் பொதுவான தளர்வுகள் இன்று முதல் அமல்: 11 மாவட்டங்களில் கட்டுப்பாடு நீங்கியது!