கடன் என்பதே அவசரத் தேவைக்காக வாங்குவது. ஆனால், விண்ணப்பத்தை ஆய்வு செய்தல், சிபில் ஸ்கோர் (Cibil Score) சரிபார்த்தல் என நாட்களைக் கடத்தும் மற்ற வங்கிகளில் இருந்து, சற்று வித்தியாசமாக சிந்திக்கிறது ஐசிஐசிஐ வங்கி (ICICI) நிர்வாகம்.
அப்படி ICICI வங்கி அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ள திட்டமே, ஏடிஎம் மூலமே Personal Loan வழங்குவது. இதன்மூலம் வங்கிக்குச் சென்று, கடன் பெறுவதற்காக கால்கடுக்க நிற்க வேண்டியது இனிமேல் இருக்காது.
ஏடிஎம் கடனுதவி சேவை
ஏடிஎம் மூலம் அவசரக் கடன் பெற விரும்புபவர்களாக இருந்தால், உங்களுக்கு அருகில் உள்ள ஐசிஐசிஐ வங்கி ஏடிஎம்-மிற்குச் செல்லவேண்டும்.
ATMல் Apply என்ற ஒரு Option இருக்கும். அதில் உங்கள் தகவல்களைக் கொடுத்தால், இந்த கடனைப் பெற நீங்கள் தகுதியானவரா? இல்லையா? என்பதை ஏடிஎம் இயந்திரமேத் தெரிவித்துவிடும்.
அதாவது தங்கள் வாடிக்கையாளரின், சிபில் ஸ்கோரைப் (CIBIL Score) பொருத்து, விண்ணப்பிக்கத் தகுதியானவரா என்பது உறுதி செய்யப்படுகிறது.
எவ்வளவு தொகை?
இதன்படி சுமார் ரூ.15 லட்சம் வரை ICICI Personal Loan பெற முடியும். இந்தத் தொகை உங்கள் வங்கிக் கணக்கிலேயே செலுத்தப்படும்.
வட்டி (Interest)
இதற்கு 10 முதல் 17 சதவீதம் வரை வட்டி விதிக்கப்படுகிறது.
EMI
கடன் தாரர்கள், இந்தக் கடனை 5 ஆண்டுகளுக்குள் மாதாந்திரத் தவணையாக திருப்பி செலுத்திவிட வேண்டும்.
மேலும் படிக்க...
வீடு தேடிவரும் வரும் மொபைல் ATM - SBI அறிமுகம்!!
அஞ்சலக சேமிப்புக் கணக்கில் மினிமம் பேலன்ஸ் ரூ.500 கட்டாயம் - தவறினால் கணக்கு முடக்கப்படும்!