உங்கள் செல்ல நாய்க்கு உடம்பு சரியில்லையா? இனிமேல் உங்களாலும், தலை சிறந்த மருத்துவமனையில் தரமான சிகிச்சை அளிக்கமுடியும், ஹாஸ்பிட்டல் பில்லே கட்டாமல்! அது எப்படி? விபரம் தெரிந்துகொள்ள மேலும் படியுங்கள்.
நம் குடும்ப உறுப்பினர்களைப் போல், வளர்க்கும் செல்லப்பிராணிகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்படும்போது, அதன் எஜமானர் பணத்தை தண்ணீராகச் செலவிட வேண்டியுள்ளது.
இருப்பினும் தரமான சிகிச்சை சில வேளைகளில் கிடைக்காததால், நம் செல்லத்தை இழக்க வேண்டிய சூழலும் ஏற்படுகிறது. இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காகவே பிரபல இன்சூரன்ஸ் நிறுவனமான பஜாஜ் அலையன்ஸ், பெட் டாக் இன்சூரன்ஸ் பாலிசியை( Pet Dog Insurance Policy) அறிமுகம் செய்துள்ளது.
இந்தத் திட்டத்தின்படி 3 மாதம் முதல் 10 வயதிற்கு உட்பட்ட வளர்ப்பு நாட்களுக்கு வாழ்நாள் முழுவதும் காப்பீடு பெற முடியும்.
3 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரையிலான நாய்க்கு, ஆண்டுக்கு ரூ.315 ப்ரிமியம் தொகையாக செலுத்த வேண்டும்.
இதில் பெடி கிரீ, நான் பெடிகிரீ, கிராஸ் பிரீட் (pedigree, non-pedigree, cross-bred )
மற்றும் அழிந்து வரும் அரிதான ரக நாய்களுக்கும் காப்பீடு பெற முடியும்.
இந்தப் புதியத் திட்டத்தில் காப்பீடு செய்துவிட்டால், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுதல், அறுவை சிகிச்சை ஆகியவற்றை பணம் செலவில்லாமல் பெறலாம்.
இதைத்தவிர மூளைப் புற்றுநோய், சிறுநீரக பாதிப்பு போன்ற உயிர்கொல்லி நோய்கள், ஓபிடி சிகிச்சை (OPD, நீண்ட கால நோய்கள், வெறிநாயாக மாறிவிடுதல், நாய் தொலைந்துபோதல் போன்றவையும் இந்தக் இந்த காப்பீட்டின் வரம்பிற்குள் வந்துவிடுகிறது.
இதேபோன்று, பூனை, கிளி, முயல் உள்ளிட்ட மற்ற செல்லப்பிராணிகளுக்கும் காப்பீடு வந்தால் செல்லப்பிராணி பரியர்கள் பயனடைவர்.
மேலும் படிக்க...
மழைக்காலத்தில் நாட்டுக் கோழிகளைத் தாக்கும் நோய்கள்- எளிய தடுப்பு முறைகள்!
NLM: எருமைப்பண்ணையாராக மாற விருப்பமா? 50% வரை மானியம் அளிக்கிறது மத்திய அரசு!