News

Thursday, 15 July 2021 11:07 AM , by: T. Vigneshwaran

Petrol Diesel

தின்தோறும் அதிகரித்து  வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் சாமானிய மக்களின் வாழ்வை பாதித்துள்ளன என்பதை மறுக்க முடியாது. இப்போது, ​​நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் போக்கு உள்ளது.

மக்களின் மிகவும் தேவலாய்ப்படும் ஒன்றான பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் சில ஆண்டுகளுக்கு முன் வரை மாதத்தில் இரு முறை மட்டுமே,  நிர்ணயம் செய்யும் முறை இருந்தது.

ஆனால் இப்போது பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் விலைகளை  தினசரி அடிப்படையில் நிர்ணையிக்கின்றன. அதன் விலைகளின் இன்றைய நிலவரம் பற்றி தெரிந்து கொள்வோம்.

ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களுக்கு பின் எண்ணெய் நிறுவனங்கள் தற்போது பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகின்றன. சில நாட்கள் முன்னதாக் விலைகள் வானத்தை எட்டிவிட்டன. இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 24 காசுகள் என்ற அளவிலும், டீசல் விலை லிட்டருக்கு 22 காசுகள் என்ற அளவிலும் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் இன்றைய  பெட்ரோல் விலை நேற்றைய விலையிலிருந்து 31 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டருக்கு ரூ.102.23 ஆக விற்கப்படுகிறது. அதே போல் டீசல் விலையும் நேற்றைய விலையிலிருந்து 15 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டருக்கு ரூ. 94.39 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவலை தடுக்க கடந்த ஆண்டு மார்ச் இறுதியில் நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பின்னர் பெட்ரோல் டீசல் விலைகளில் மாற்றம் எதுவும் இல்லாமல் இருந்தது. அதன் பிறகு விலைகளில் தொடர்ந்து மாற்றத்தை காணமுடிந்தது.

மேலும் படிக்க:

ஹெல்மெட் வாங்கினால் பெட்ரோல் மற்றும் முகக்கவசம் இலவசம்!

ரேஷன் அட்டைதாரர்களுக்கு அறிவிப்பு! அமைச்சர் சக்கரபாணி!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)