1. செய்திகள்

ஹெல்மெட் வாங்கினால் பெட்ரோல் மற்றும் முகக்கவசம் இலவசம்!

T. Vigneshwaran
T. Vigneshwaran

Petrol and helmet free with helmet purchase!

தமிழ் திரையுலகத்தின் பிரபல காமெடி நடிகர் பெஞ்சமின் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் முகக்கவசம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஹெல்மெட் வாங்கினால் ஒரு லிட்டர் பெட்ரோல் மற்றும் முகக்கவசம் வழங்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை துவங்கி வைத்தார். பலர் ஆர்வமுடன் ஹெல்மெட் மற்றும் முகக்கவசம் வாங்கி சென்றதையும் காண்முடிந்தது.

இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும், தலை கவசம் உயிர் கவசம் என்றும் சொல்லலாம். மேலும்  ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து அரசு மற்றும் தன்னார்வ அமைப்பினர் பல விதமான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டம் கோட்டை பகுதியில் முகமது காசிம் என்பவர் ஹெல்மெட் கடை நடத்தி வருகிறார்,  இவர் நீண்டகாலமாக ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறார்.  இந்த நிலையில் அதன் தொடர்ச்சியாக இன்று அனைவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு 399 ரூபாய்க்கு ஹெல்மெடுடன்  ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசமாகவும் 499 ரூபாய்க்கு ஹெல்மெட் வாங்கினால் 100 முக கவசமும் மற்றும் ஃபேஸ்சில்டு கவர் மற்றும் சனிடைசர் போன்றவற்றை இலவசமாக வழங்கினார்.

இந்தவிழிப்புணர்வு திட்டத்தை பிரபல நகைச்சுவை நடிகர் பெஞ்சமின் துவக்கி வைத்தார். மேலும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு முயற்சிகளை எனது நண்பர் மேற்கொண்டு வருகிறார் கட்டாயம் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் மட்டுமே இந்த இலவசம் பெட்ரோல் மற்றும் முக கவச விற்பனையை துவங்கி உள்ளோம் என்று  பிரபல நடிகர் பெஞ்சமின் கூறினார்.

மேலும் படிக்க:

ரேஷன் அட்டைதாரர்களுக்கு அறிவிப்பு! அமைச்சர் சக்கரபாணி!

111 நாடுகளில் டெல்டா வைரஸ்:வேகமாகப் பரவும் ஆபத்து!

English Summary: Petrol and helmet free with helmet purchase!

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.